தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கோலிவுட்டில் ஏராளமான கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதிகளவிலான வெற்றிப்படங்களில் நடித்த விஜய் இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்துக்கு ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இப்படி ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் தவறவிட்ட படங்களும் ஏராளம். அதன் பட்டியலை பார்க்கலாம்.
24
Mudhalvan
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து பிரம்மாண்ட வெற்றியடைந்த முதல்வன் படத்தின் கதை விஜய்க்கு தான் சொல்லி இருக்கிறார் ஷங்கர். ஆனால் அந்த சமயத்தில் அரசியல் படங்கள் வேண்டாம் என தவிர்த்த விஜய், அதில் நடிக்க மறுத்துவிட்டார். இதுதவிர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா மற்றும் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடித்த ரன் போன்ற படங்களில் பர்ஸ்ட் சாய்ஸாக இருந்தது தளபதி விஜய் தானாம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய் உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சண்டக்கோழி திரைப்படமும் விஜய் நடிக்க வேண்டியது தானாம். அப்படத்தின் முதல் பாதி கதையை மட்டும் கேட்ட விஜய் படத்தில் தன்னைவிட ராஜ்கிரணுக்கு அதிக ஸ்கோப் இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டாராம். அதேபோல் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் முதலில் நடித்தது விஜய் தான், பின்னர் சில நாட்களில் அவர் விலகியதால் அவரது இடத்தை சூர்யா ரீப்ளேஸ் செய்தார்.
44
Ponniyin Selvan
இதுதவிர சேரன் இயக்கிய ஆட்டோகிராப், தரணியின் தூள், சுந்தர் சி-யின் உள்ளத்தை அள்ளித்தா, ஹரி இயக்கிய சிங்கம், கே.வி.ஆனந்தின் அநேகன் ஆகிய படங்களில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான். அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படமான பொன்னியின் செல்வனிலும் விஜய் நடிப்பதாக இருந்தது. அவர் 2010ம் ஆண்டு அப்படத்தை இயக்க முயலும் போது அதில் விஜய்யையும் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்படம் அந்த சமயத்தில் எடுக்க முடியாததால் கைவிடப்பட்டது.