நாக சைதன்யாவின் தாய் லட்சுமி மீண்டும் திருமணம் செய்து கொண்டாரா? 2வது கணவர் யார்?

First Published | Aug 30, 2024, 10:45 AM IST

நாகார்ஜுனாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நடிகர் நாக சைதன்யாவின் தாய் லட்சுமி யாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பதை பார்க்கலாம்.

Naga Chaitanya, Lakshmi

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவரது மகன் நாக சைதன்யாவும் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வருகிறார். சினிமாவில் சக்சஸ்புல் நடிகர்களாக வலம் வரும் இவர்கள் இருவருக்கு சொந்த வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை. நாகார்ஜுனாவை போல் அவரது மகன் நாக சைதன்யாவுக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. விரைவில் அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருக்கிறது.

Naga Chaitanya With his Mom

நாக சைதன்யா நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார். இருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நாக சைதன்யா, நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த மகனாவார். நாகார்ஜுனா லட்சுமி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. கடந்த 1990ம் ஆண்டு லட்சுமியை விவாகரத்து செய்து பிரிந்தார் நாகார்ஜுனா.

இதையும் படியுங்கள்... ஹீரோவை விட காமெடியனுக்கு தான் மவுசு சாஸ்தி – ரோல் மாடலாக திகழும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு!

Tap to resize

Naga Chaitanya Mother Lakshmi

லட்சுமியை பிரிந்த பின்னர் நடிகர் நாகார்ஜுனா நடிகை அமலாவை 2-வது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனாவை போல் அவரது முதல் மனைவி லட்சுமியும் விவகாரத்துக்கு பின் மறுமணம் செய்துகொண்டுள்ளார். அவர் ஸ்ரீராம் மோட்டார்ஸ் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் சரத் விஜயராகவனை தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாராம். திருமணத்துக்கு பின்னர் கணவருடன் லட்சுமி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாராம்.

Lakshmi with her second Husband

மேலும் லட்சுமியின் இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தான் நடிகர் நாக சைதன்யா தன்னுடைய தாயை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் அதெல்லாம் வதந்தி என்பது சமீபத்தில் நடந்து முடிந்த நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் நிச்சயதார்த்தம் மூலம் தெரியவந்தது. இந்த நிச்சயதார்த்த விழாவில் தன்னுடைய இரண்டாவது கணவருடன் வந்து கலந்துகொண்டு தன் மகனை வாழ்த்தி இருக்கிறார் லட்சுமி.

இதையும் படியுங்கள்... ஜில் ஜங் ஜக் முதல் நாய்சேகர் வரை... பட தலைப்புகளாக மாறிய வடிவேலுவின் சூப்பர் ஹிட் டயலாக்ஸ் ஒரு பார்வை

Latest Videos

click me!