Movie Titles based on Vadivelu Dialogues
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தன்னுடைய நகைச்சுவையால் மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. அவர் பேசிய காமெடி வசனங்கள் படத்தலைப்புகளாக மாறிய சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அப்படி வடிவேலு பேசிய வசனங்களை தலைப்பாக வைத்த படங்கள் பற்றி பார்க்கலாம்.
Naanum Rowdy Dhaan
நானும் ரெளடி தான்
தலைநகரம் படத்தில் போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு நான் ஜெயிலுக்கும் போறேன் நானும் ரெளடி தான் என்கிற வசனத்தை வடிவேலு பேசி இருப்பார். இந்த வசனம் பின்னர் படத்தலைப்பாக மாறியது. கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படத்துக்கு நானும் ரெளடி தான் என பெயரிடப்பட்டு ரிலீஸ் ஆனது. அந்த டயலாக்கை போல் படமும் சூப்பர்ஹிட் ஆனது.
Jill Jung Juk
ஜில் ஜங் ஜக்
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் காதலன். அதில் பெண்களை வர்ணிக்கும் விதமாக வடிவேலு ஜில் ஜங் ஜக் என்கிற வசனத்தை பேசி இருப்பார். அந்த வசனம் கடந்த 2012-ம் ஆண்டு தீரஜ் வைத்தி இயக்கத்தில் சித்தார்த் நடித்த டார்க் காமெடி படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டது.
Plan Panni Pannanum
பிளான் பண்ணி பண்ணனும்
பிரபுதேவா இயக்கிய போக்கிரி படத்தில் வடிவேலு பேசிய எபிக் டயலாக் தான் பிளான் பண்ணி பண்ணனும். இந்த டயலாக்கை டைட்டிலாக வைத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கிய படம் தான் பிளான் பண்ணி பண்ணனும். இப்படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்தார்.
Varuthapadatha Valibar Sangam
வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வடிவேலு பேசிய டயலாக் மட்டுமின்றி அவர் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சிலவும் படத் தலைப்புகளாக மாறி இருக்கின்றன. அப்படி வின்னர் படத்தில் வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவராக நடித்திருப்பார். அதனை படத்தலைப்பாக மாற்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் படமெடுத்தார் பொன்ராம். அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.