லிஃப்ட் கதவு மூடியதும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.. சீனியர் நடிகருக்கு பளார் என அறைவிட்ட நடிகை உஷா

First Published | Aug 30, 2024, 8:36 AM IST

சீனியர் மலையாள நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதால் அவருக்கு கன்னத்திலேயே பளார் என அறைவிட்டதாக நடிகை உஷா கூறி உள்ளார்.

Actress Usha

மலையாள திரையுலகில் நடந்த பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த நிலையில், நடிகைகள் பலர் தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகை உஷா, சீனியர் நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டது பற்றி பழைய பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி உள்ளார். அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

Usha shocking allegation

பஹ்ரைனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்தோம். அப்போது அனைவரும் களைப்புடன் இருந்தோம். அந்த சமயத்தில் நடிகர் மோகன்லால் எங்கள் அனைவரிடமும் உடைமைகளை ஹாலுக்கு கொண்டுவாருங்கள் அங்கு அமர்ந்து பேசலாம என்று சொன்னார். உடனே நான் என் உடைமைகளை எடுத்துக் கொண்டு லிஃப்டுக்குள் ஏறினேன். அப்போது பிரபல நடிகரும் லிஃப்டுக்குள் இருந்தார்.

இதையும் படியுங்கள்... கர்ப்பமாக இருந்த போது, வயிற்றில் எட்டி உதைத்தார்... கொடுமைப்படுத்திய நடிகர் முகேஷ் - நடிகை சரிதா கண்ணீர்!

Tap to resize

Malayalam Acress Usha

கீழே போகணுமா என கேட்டார். நானும் ஆமாம் என சொல்லி லிஃப்டுக்குள் சென்றேன். லிஃப்ட் கதவு மூடியதும், அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் உடனே பளார் என அறைவிட்டேன். அதற்குள் லிஃப்ட் அடுத்த தளத்திற்கு வந்துவிட்டது. அப்போது அங்கு நடிகை சுகுமாரி லிஃப்டுக்குள் ஏறினார். என்ன பிரச்சனை என கேட்டார். நானும் நடந்ததை கூறினேன். பின்னர் மோகன்லாலும் அதுபற்றி கேட்டார். அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.

Usha Haseena

அப்போது சுகுமாரி, மோகன்லால் இருவரும் என்னை சமாதானப்படுத்தினார்கள். அதன்பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது. என்னை திமிரு பிடித்தவள் என முத்திரை குத்தினார்கள். நான் சூப்பர்ஸ்டார்கள் மீது மட்டும் குற்றம் சுமத்துவதாக கூறினார்கள். அதே நேரத்தில் எனக்கு சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. யாரும் என்னை நடிக்க அழைக்கவில்லை” என தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை உஷா கூறி இருக்கிறார். அவர் அந்த சீனியர் நடிகர் யார் என்று சொல்லாவிட்டாலும், அவர் தற்போது உயிருடன் இல்லை என்று கூறினார்.

இதையும் படியுங்கள்... ப்ரோ வாழ்த்துக்கள்.. சென்னையில் F4 கார் ரேசிங் - அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்!

Latest Videos

click me!