கர்ப்பமாக இருந்த போது, வயிற்றில் எட்டி உதைத்தார்... கொடுமைப்படுத்திய நடிகர் முகேஷ் - நடிகை சரிதா கண்ணீர்!

Published : Aug 30, 2024, 07:40 AM ISTUpdated : Aug 30, 2024, 07:41 AM IST

நடிகை சரிதா, தன்னுடைய முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான முகேஷ் படுத்திய கொடுமைகள் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

PREV
14
கர்ப்பமாக இருந்த போது, வயிற்றில் எட்டி உதைத்தார்... கொடுமைப்படுத்திய நடிகர் முகேஷ் - நடிகை சரிதா கண்ணீர்!
Saritha ex husband Mukesh

மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் கொடுமைகளை ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. இதனால் மலையாள நடிகர்கள் ஏராளமானோர் செய்த பாலியல் லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படி நடிகைகளிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகரும், கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான முகேஷ் பற்றியும் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் அவரின் முன்னாள் மனைவி சரிகா பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

24
Saritha Marriage Photo

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இதையெல்லாம் வெளியே சொல்ல நான் வெட்கப்படுகிறேன். முகேஷ் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சினிமாவில் பெண்களை கொடுமைப்படுத்தும் காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் அப்படி எனக்கு நடக்கும் என கனவில் கூட நினைக்கவில்லை. முகேஷால் நான் அனுபவித்த கொடுமைகள் குறித்து மீடியாவில் நான் இதுவரை சொன்னதில்லை. முதன்முறையாக சொல்கிறேன்.

இதையும் படியுங்கள்... "நீ ஒரு ப்ராடுனு உலகத்துக்கே தெரியும்" - செருப்பை காட்டி விஷாலை வறுத்தெடுத்த ஸ்ரீரெட்டி!

34
Saritha

ஒரு முறை ஓணம் பண்டிகை வந்தது. அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். பண்டிகை என்றாலே எல்லோரும் சந்தோஷமாக தான இருப்போம். ஆனால் அந்த டைம்ல கூட முகேஷ் என்னுடன் சண்டை போட்டு என் வயிற்றிலேயே எட்டி உதைத்தார். அப்போது வலியால் நான் கீழே விழுந்து கதறி அழுதேன். அதைப்பார்த்து நீதான் நல்ல நடிகையாச்சே நல்லா நடிக்கிறாய் என்று சொல்லி சிரித்தார். அவர் எப்போ எப்படி இருப்பார் என்று சொல்லவே முடியாது.

44
Actress Saritha

ஒருநாள் இரவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஏன் லேட்டா வந்தீங்கனு கேட்டேன். அதற்கு என் தலைமுடியை பிடித்து தரையில் தள்ளிவிட்டு அடித்தார். அதன்பின்னர் அவர் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர் ஒரு நாள் முகேஷின் தந்தை என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார். அவர் என் கையை பிடித்து முகேஷின் நடவடிக்கைகள் சரியில்லை என கூறி அழுததோடு, அவரைப்பற்றி யாரிடமும் வெளியே சொல்ல வேண்டாம் என சத்தியம் வாங்கினார். இதனால் அவர் உயிருடன் இருந்தவரை அதை வெளியில் சொல்லவில்லை” என சரிதா கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... கூலி படத்தின் "DISCO".. அதில் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? நெட்டிசன்களின் கணிப்பு உண்மையா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories