சிறகடிக்க ஆசையை அடித்து பறக்கவிட்ட சன் டிவி தொடர்கள்! இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ!

First Published | Aug 29, 2024, 8:51 PM IST

இந்த வாரம் சின்னத்திரை ரசிகர்கள் மனதை கவர்ந்த சீரியல்களில், TRP-யில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Kayal Serial:

இந்த வருடத்தின் 34 ஆவது வாரத்தில், அர்பன் மற்றும் ரூரலில் டிஆர்பியில்,  டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரம் 8 .96 TRP புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில், தற்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருவது பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Singapenne Serial

 இரண்டாவது இடத்தை சிங்கப்பெண் சீரியல் பிடித்துள்ளது. தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்து பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆனந்தி, அவை அனைத்தையும் தாண்டி எப்படி கோவில் நடிகையை கண்டுபிடிக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. இந்த தொடர் 8. 77 TRP புள்ளிகளை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது இடத்தில், 8.16 TRP புள்ளிகளுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் உள்ளது.

கடன் வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்க நினைத்த விமல்! செக் வைத்த உயர்நீதிமன்றம் - அதிரடி தீர்ப்பு!

Tap to resize

Marumagal Serial

இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில், 8.02 TRP புள்ளிகளுடன் சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'மருமகள்' சீரியல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிரபு - ஆதிரை நிச்சயதார்த்தத்தை நிறுத்த பல பிரச்சனைகள் வந்த நிலையில், அதை அனைத்தையும் தாண்டி இந்த நிச்சயம் நடந்தது ஒருபுறம் இருந்தாலும், திருமணம் நடப்பதற்குள் என்னென்ன குழப்பங்கள் வர உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

Siragadikka Aasai

மேலும் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியல். கடந்த மாதம் முழுவதும் TRP-யில் முதல் இரண்டு இடத்தை தக்கவைத்து கொண்ட இந்த தொடர், 7.95 TRP புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.

அப்பா விஜயகுமாரின் 81-ஆவது பிறந்தநாள்! மகன் - மகள்களோடு சாமி தரிசனம்! வைரல் போட்டோஸ்!
 

Pandian Store 2:

6-வது இடத்தில் 7.52 TRP புள்ளிகளுடன், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மல்லி' சீரியல் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏழாவது இடத்தில் 7.9 TRP புள்ளிகளுடன்... இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும்  சுந்தரி சீரியல் உள்ளது.  8-ஆவது இடத்தில் 6.13 டிஆர்பி புள்ளிகளுடன், விஜய் டிவியில் மிக முக்கிய தொடரான 'பாக்கியலட்சுமி' சீரியலும், 9-வது  இடத்தில் 5. 81 TRP புள்ளிகளுடன் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலும் உள்ளது. இந்த வாரம் TRP-யில் 10-ஆவது இடத்தை கைப்பற்றி உள்ளது, விஜய் டிவியின் 'சின்ன மருமகள்' சீரியல். 

Latest Videos

click me!