"காதல்", "பெற்றதாய்" மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்" போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மெகா ஹிட் தெலுங்கு திரைக்கூலக நடிகர் தான் நாகேஸ்வர ராவ். அவருடைய மகன் தான் பிரபல நடிகர் நாகார்ஜுனா. என்ன தான் தெலுங்கு மொழியில் மிகப்பெரிய நடிகராக இவர் வலம் வந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.
கடந்த 1986ம் ஆண்டு வெளியான "விக்ரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தெலுங்கு மொழியில் தொடங்கிய நாகர்ஜுனா இன்று வரை தெலுங்கு திரை உலகின் டாப் நடிகராக பயணித்து வருகின்றார். தன்னுடைய கதாபாத்திரத்தை பொறுத்து ஒரு திரைப்படத்திற்கு 10 முதல் 25 கோடி ரூபாய் வரை இவர் சம்பளமாக பெறுகிறார்.
இந்த ட்விஸ்ட் லிஸ்ட்லயே இல்லையே.. ரஜினியின் கூலி - படத்தில் இணைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!