இந்த ட்விஸ்ட் லிஸ்ட்லயே இல்லையே.. ரஜினியின் கூலி - படத்தில் இணைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

First Published | Aug 29, 2024, 6:00 PM IST

Coolie Update : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்னதைப்போல, நேற்று முதல் கூலி படத்தில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் குறித்த அப்டேட் வரத் துவங்கியுள்ளது.

Coolie Movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி" திரைப்பட பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி முதல் இப்படத்தில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று முதல் படத்தில் நடிக்கும் கலைஞர்களின், கதாபாத்திர பெயரோடு அப்டேட்களை லோகேஷ் கொடுத்து வருகின்றார்.

அப்பா விஜயகுமாரின் 81-ஆவது பிறந்தநாள்! மகன் - மகள்களோடு சாமி தரிசனம்! வைரல் போட்டோஸ்!

Actor Soubin Shahir

இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான அறிவிப்பின்படி, லோகேஷ் கனகராஜன் "கூலி" திரைப்படத்தில், அண்மையில் வெளியாகி மெகா ஹிட்டான "மஞ்சுமல் பாய்ஸ்" படத்தில் நடித்து அசத்திய மலையாள திரைப்பட நடிகர் "சௌபின் ஷாஹிர்", "தயால்" என்கின்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது அவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Shruti Haasan

அதேபோல இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை சுருதிஹாசன், மூத்த தமிழ் திரையுலக நடிகர் சத்யராஜ், மூத்த தமிழ் திரையுலக நடிகை சோபனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Actor Nagarjuna

கடந்த 1991ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான "Shanti Kranti" என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த நிலையில், சுமார் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் இந்த "கூலி" திரைப்படத்தில் இணைகிறார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா. இதற்கு முன்னதாக தமிழில் "ரட்சகன்", "பயணம்" மற்றும் தோழா" ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா முதல்.. "தனுஷின் தம்பி" வரை - ஹைதராபாத்தில் நச்சுனு ரெஸ்டாரண்ட் கட்டி கல்லாக்கட்டும் நடிகர்கள்!

Latest Videos

click me!