Published : Aug 29, 2024, 05:12 PM ISTUpdated : Aug 29, 2024, 05:13 PM IST
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் இன்று தன்னுடைய 81-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், நாட்டுச்சாலை என்கிற கிராமத்தில் பிறந்து.. குழந்தை நட்சத்திரமாக 'ஸ்ரீ வள்ளி' படத்தில் மூலம் அறிமுகமானவர் விஜயகுமார். சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி முன்னணி வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், குழந்தை முருகராக விஜயகுமார் நடித்திருப்பார். இதை தொடர்ந்து 'கந்தன் கருணை' படத்திலும் இவர் முருகர் வேடத்தில் நடிக்க பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு சிவகுமாருக்கு சென்றது.
25
Actor Vijayakumar First Movie
1960-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1970-களில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். 'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகுமார், இதை தொடர்ந்து, மாணிக்க தொட்டில், அவள் ஒரு தொடர்கதை, முருகன் காட்டிய வழி என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். திறமையும் - அழகும் இருந்தும், இவரால் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போனது. 80-பது மற்றும் 90-களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கினார்.
ஹீரோவாக நிலையான இடத்தை பிடிக்க தவறினாலும்.. முன்னணி குணச்சித்திர நடிகர் என பெயர் எடுத்தார். இவர் சினிமாவில் நடிக்க துவங்கியதும் உறவினர் பெண்ணான முத்து கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிக்க துவங்கிய பின்னர் நடிகை மஞ்சுளாவை காதலித்து முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
45
Vijayakumar Son and Daughters
முதல் மனைவியின் மூலம் அனிதா, கவிதா, அருண் விஜய் என இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், இரண்டாவது மனைவி மஞ்சுளா மூலம்... வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் அனிதா விஜயகுமாரை தவிர மற்ற நான்கு பேருமே நடிகர்கள். திருமணத்திற்கு பின்னர் விஜயகுமாரின் மகள்கள் திரையுலகை விட்டு விலகிய நிலையில், அருண் விஜய் மட்டும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.
இந்நிலையில் விஜயகுமார் இன்று தன்னுடைய 81-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், தன்னுடைய மகன் அருண் விஜய், மனைவி முத்து கண்ணு, மகள்கள் அனிதா, ப்ரீத்தாவுடன் கோவிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.