அதேபோல ஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது தான் ஃபிலிம் நகர். இந்த நகருக்கு வரும் அனைவரும் விரும்பி செல்லும் ஒரு உணவகம் தான் Sanctuary. பலவகை உணவுகளை உயர்ந்த தரத்தில் வழங்கக்கூடிய இந்த உணவகத்தின் உரிமையாளர் பிரபல நடிகர் ராணா தகுபதி தான். இந்த உணவகம் அவருடைய சிறு வயது கனவு என்று அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார்.