Actress Kuyili
தமிழில் இப்போது பெரிய அளவில் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும், 80களின் ஆரம்பத்தில் கிளாமர் நாயகியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் தான் குயிலி. கடந்த 1983ம் ஆண்டு தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "தூங்காதே தம்பி தூங்காதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார். "பூவிலங்கு", "ஒரு மனிதன் ஒரு மனைவி" போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்த குயிலி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிளாமர் நாயகியாக வலம் வந்தார்.
பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?
Disco Shanthi
தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி முற்றும் தெலுங்கு மட்டுமல்லாமல் "ஒடியா" மொழியிலும் கூட சிறந்த நடிகையாக வலம் வந்தவர் தான் டிஸ்கோ சாந்தி. ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடமேற்று நடித்திருந்தாலும் பெரிய அளவில் இவர் கதையின் நாயகியாக நடித்ததில்லை. பல படங்களில் இவர் காமெடியில் கூட கலக்கியுள்ளார். 1990களின் இறுதி வரை திரைத்துறையில் பயணித்த இவர், தற்பொழுது தனது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Anuradha
டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் கொடிகட்டி பறந்து வந்த காலத்திலேயே, கிளாமர் நாயகியாக அவர்களுக்கு இணையான புகழோடு வளம் வந்தவர் தான் அனுராதா. இறுதியாக தமிழில் கடந்த 2016ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான "கெத்து" திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஒடியா உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மெகா ஹிட் நாயகியாக வலம் வந்த இவர், தற்பொழுது சின்னத்திரை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.
Silk Smitha
தமிழ் திரையுலகை பொருத்தவரை கிளாமர் நடிகை என்று வரும் பொழுது, அதில் முதலிடத்தில் எப்போதும் இருப்பது "சில்க்" ஸ்மிதா மட்டுமே. காரணம் இவர் ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய திலகம் பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தனது இறுதி காலம் வரை பிறரோடு அன்பாக, நேசத்தோடு பழகிய இவருடைய மரணம் இன்று வரை மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் பட வசூலை பார்த்து பயந்துட்டார் எம்.ஜி.ஆர் ! எந்த படம்? முக்தா ரவி கூறிய ஆச்சர்ய தகவல்!