
கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள ஹேமா கமிட்டியின் அறிக்கை, மலையாள திரையுலகையே பதற வைத்துள்ள நிலையில், கேரளாவில் பிறந்து, தமிழில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஊர்வசி பாலியல் தொந்தரவு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
தன்னுடைய 9 வயதில், மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஊர்வசி, ஹீரோயினாக நடித்த முதல் படம் தமிழில் தான். இயக்குனர் பாக்யராஜ் நடித்து - இயக்கி 1983 ஆம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், தாவணி கனவுகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தால், போன்ற ஏராளமான படங்களில் நடித்தார்.
ரஜினிகாந்த் பட வசூலை பார்த்து பயந்துட்டார் எம்.ஜி.ஆர் ! எந்த படம்? முக்தா ரவி கூறிய ஆச்சர்ய தகவல்!
இவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், "நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது இப்போது வந்தது அல்ல. நான் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்பில் இருந்தே உள்ளது. இது போன்ற பிரச்சனைகளை சில நடிகைகள் அனுபவித்துள்ளனர். அது பற்றி என்னிடம் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் அந்த காலகட்டத்தில், இது பற்றி நடிகைகள் பெரிதாக வெளியில் பேசிக் கொள்வது இல்லை. இப்போது திரைத்துறையில் உள்ள பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாக பேசுவதற்கு அரசு ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனை நடிகைகள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை தண்டிக்க வாய்ப்பாக இது மாறி உள்ளது.
அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள்! 3 நாளில் புதிய குழு - நடிகர் விஷால் பேட்டி!
கேரள திரையுலகில் மட்டுமே இது போல் நடக்கவில்லை. வட இந்தியாவிலும் படிப்பறிவு இல்லாத பெண்கள் மீது நடத்தும் பாலியல் கொடுமையோடு ஒப்பிடும்போது, கேரளா சற்று முன்னேறி இருக்கிறது என்று தான் நினைக்க தோன்றுகிறது. கேரள பெண்கள் அதை துணிச்சலாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளனர். பாலியல் தொந்தரவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பது, இங்கு முற்போக்குத்தனமான பெண்கள் இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. தங்களைப் போல் இனி யாரும் இதுபோல் பாதிப்படைய கூடாது என்கிற என்கிற நோக்கத்தில் சில பெண்கள் இதை எதிர்த்து போராடுகின்றனர்.
தமிழ் சினிமாவிலும் இது போன்ற பிரச்சனைகள் உள்ளன என்பதை உறுதி செய்துள்ள நடிகை ஊர்வசி... இது போன்ற பிரச்சனைகளை நடிகைகள் எதிர்கொள்ளாமல் இருக்க சில டிப்சுகளை கூறியுள்ளார். பொதுவாக படம் பற்றி பேசுவதாக இருந்தால், ஹோட்டல், ரெஸ்ட்டாரெண்ட், காபி ஷாப் போன்ற இடங்களில் பேசலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கு வர சொன்னால் அது போன்ற சந்திப்புகளை தவிர்க்க வேண்டும். இதை ஒரு விதிமுறையாகவே சினிமா துறை சார்ந்த சங்கங்கள் கொண்டுவர வேண்டும்.
ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?
அதையும் மீறி சிலர் இதுபோன்ற சந்திப்புகளை ஏற்படுத்திக்கொண்டால், அதற்கும் சங்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என கூற வேண்டும். அப்போதுதான் பலர் தனியாக யாரையும் சந்திக்க மாட்டார்கள். இதுபோன்ற பாலியல் சர்ச்சைகளும் குறையும் என தெரிவித்துள்ளார். அதே நேரம் ஒரு பெண்ணை பார்க்கும் போது ஆண்களுக்கு விருப்பம் ஏற்படுத்துவது உண்டு இதை சிலர் வெளிப்படையாக கூறலாம். இதெல்லாம் பாலியல் சீண்டல் என கூறமுடியாது. ஒரு பெண்ணின் தொழிலையே முடக்கும் அளவுக்கு அவளுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்தாலோ... விருப்பம் இல்லாமல் உடல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாலோ அது தான் பாலியல் தொந்தரவு என ஊர்வசி கூறியுள்ளார்.