ரஜினிகாந்த் பட வசூலை பார்த்து பயந்துட்டார் எம்.ஜி.ஆர் ! எந்த படம்? முக்தா ரவி கூறிய ஆச்சர்ய தகவல்!

First Published | Aug 29, 2024, 2:38 PM IST

ரஜினிகாந்தின் பட வசூலை பார்த்து எம்ஜிஆரே... "என்னையா இந்த ஆளு, இந்ந பின்னு பின்றான் என தன்னுடைய தந்தையிடம் கேட்டதாக", பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Muktha Srinivasan

தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 20-திற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும் பிரபலமானவர் முக்தா ஸ்ரீனிவாசன். இவருடைய மகன் முத்த ரவி அண்மையில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வசூலை கண்டு எம்ஜிஆர் பயந்து விட்டதாக கூறியுள்ளார்.

Director And Producer Muktha Srinivasan

1957 ஆம் ஆண்டு வெளியான, 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' திரைப்படத்தின் மூலம் ஸ்க்ரீன் பிளே ரைட்டர் ஆக திரை உலகில் தன்னுடைய கேரியரை துவங்கி, ஏவிஎம் தயாரிப்பில் வெளியான 'முதலாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியவர் முத்தா ஸ்ரீனிவாசன். இதைத் தொடர்ந்து தாமரைக் குளம், நாலு வேலி நிலம், ஓடி விளையாடு பாப்பா, பாஞ்சாலி, பொல்லாதவம், என ஏராளமான படங்களை இயக்கினார். இவர் ஜெமினிகணேசன் மற்றும் சிவாஜி கணேசனுக்கே அதிகப்படியான வெற்றி படங்களை இயக்கியவர்.

அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள்! 3 நாளில் புதிய குழு - நடிகர் விஷால் பேட்டி!

Tap to resize

Muktha Ravi About MGR and Rajinikanth

திரைப்படம் இயக்கம் மட்டுமின்றி, பணித்திறை, இதயத்தில் தீ, நிறைகுடம், அருணோதயம், தவப்புதல்வன், அன்பை தேடி, அந்தமான் காதலி, இமயம், நாயகன், பொல்லாதவன் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். முக்தா ஸ்ரீநிவாசன் நடிகர் MGR-க்கு மிகவும் நெருக்கமானவர். ரஜினிகாந்தும் அந்த சமயத்தில் தான் ரசிகர்களை கவரும் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.
 

Murattu Kaalai Movie

AVM தயாரிப்பில், 1980-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படம் வெளியான போது... திரையரங்கில் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதி உள்ளது. அப்போதே ரசிகர்கள் 200 ரூபாய், 300 ரூபாய் செலவு செய்து டிக்கெட் வாங்கி ரஜினி படத்தை பார்த்துள்ளனர். எம்ஜிஆருக்கு இந்த படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வர, முக்தா ஸ்ரீனிவாசனை அழைத்து,  "முரட்டு காளை படம் என்ன, இப்படி கலெக்ஷன் ஆகுது. நம்ப படங்கள் கூட இப்படி இல்லையே... என்னையா இந்த பின்னு பின்னுறான் இந்த ஆளு என ஒருவித பயத்துடன் கூறியதாக முக்தா ரவி கூறியுள்ளார். மேலும் 1980- வருடத்தில் வெளியான மனிதன், உழவன் மகன்,  பொல்லாதவன், மனதில் உறுதி வேண்டும், விடிஞ்சா கல்யாணம் என அந்த சமயத்தில் மட்டும் 7 படங்கள் சுமார் 100 நாள் ஓடியதாக தெரிவித்துள்ளார்.

ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?

Latest Videos

click me!