ஆகஸ்ட் மாதம் தமிழ் சினிமாவில் சக்சஸ்புல் மாதமாகவே அமைந்தது. இந்த மாதம் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன், விக்ரம் நடித்த தங்கலான், அருள்நிதியின் டிமாண்டி காலனி 2 மற்றும் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் ஆகியவை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
24
GOAT Movie
செப்டம்பர் 5-ல் கோட்
செப்டம்பர் மாதம் ஆரம்பமே பிரம்மாண்ட வசூல் வேட்டை காத்திருக்கிறது. ஏனெனில் முதல் படமாக நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அப்படத்துக்கு போட்டியாக எந்த தமிழ்படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனையை கோட் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 20-ந் தேதி யோகிபாபுவின் கோழிப்பண்ணை செல்லதுரை, ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடித்த லப்பர் பந்து, சதீஷ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள சட்டம் என் கையில், சசிகுமார் நடித்துள்ள நந்தன் மற்றும் காளிவெங்கட் நடித்த தோனிமா ஆகிய 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். அதேபோல் நந்தன் படத்தை இரா சரவணன் இயக்கி இருக்கிறார்.
44
Meiyazhagan
செப்டம்பர் 27-ல் மெய்யழகன்
96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் மெய்யழகன். இப்படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளாக், விஜயகாந்தின் இளைய மகன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் ஆகிய திரைப்படங்களும் செப்டம்பரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.