
சினிமாவில் நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். தென்னிந்தியாவில் ஹீரோக்களின் சம்பளம் 100 கோடியை எட்டிவிட்டாலும், ஹீரோயின்கள் அதிகபட்சமாக ரூ.12 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார். அப்படி அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகளின் பட்டியலையும் அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10. சாய் பல்லவி
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் சாய் பல்லவி 10வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளமாக வாங்குகிறார். அவர் நடிப்பில் தற்போது தமிழில் அமரன் படமும், தெலுங்கில் தண்டல் திரைப்படமும் உருவாகி வருகிறது. இதில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
9. கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருபடத்துக்கு ரூ.3 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அவர் இந்த பட்டியலில் 9ம் இடம் பிடித்திருக்கிறார். அவர் கைவசம் தற்போது பேபி ஜான் திரைப்படம் உள்ளது. அப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ். அப்படத்துக்கு பின் அவரின் மார்க்கெட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
8. அனுஷ்கா ஷெட்டி
கோலிவுட், டோலிவுட் என ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தற்போது வயதானதால் பட வாய்ப்பும் குறையத் தொடங்கி உள்ளன. அவர் கைவசம் தற்போது ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. அவர் தற்போது ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.
7. சமந்தா
நடிகை சமந்தா, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவே ரூ.5 கோடி வாங்கி வந்தார். அதன்பின்னர் மயோசிடிஸ் நோய் பாதிப்பால் ஓராண்டு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது சம்பளத்தை குறைத்து இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
6. தமன்னா
பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. அவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கும் இவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்... ராம் சரணுடன் நடிக்க கோடிகளில் பேசப்பட்ட சம்பளம்! வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி; ஏன் தெரியுமா?
5. பூஜா ஹெக்டே
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் பூஜா ஹெக்டே 5ம் இடத்தில் உள்ளார். இவரும் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தமிழில் இவர் நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா.
4. ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அவர் கைவசம் தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படமும், குபேரா படமும் உருவாகி வருகிறது.
3. ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎப் என்கிற ஒற்றை படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இவர் தமிழில் விக்ரம் ஜோடியாக கோப்ரா படத்தில் நடித்திருந்தார். இவர் ஒரு படத்துக்கு ரூ.7 கோடி சம்பளமாக வாங்குகிறார்.
2. நயன்தாரா
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவர் கைவசம் தமிழில் மண்ணாங்கட்டி திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர கவின் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
1. திரிஷா
40 வயதுக்கு மேலாகியும் முரட்டு சிங்கிளாக வலம் வரும் நடிகை திரிஷா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக் லைஃப் போன்ற படங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... ராஜா ராணி முதல் வாழை வரை! கோலிவுட்டும்... கதை திருட்டும் ஒரு பார்வை