நடிகர் விஜய் சேதுபதிக்கு, ராம் சரணுடன் RC 16 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில்... எத்தனை கோடி கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியாது என விஜய் சேதுபதி மறுத்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவந்துள்ளது.
ஹீரோ என்கிற வட்டத்திற்குள் தன்னை சுருக்கி கொள்ளாமல், வில்லன், குணச்சித்திர வேடம் என தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதை கவர்ந்து வருபவர் விஜய் சேதுபதி. கடந்த சில வருடங்களாகவே தனி ஹீரோவாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த விஜய் சேதுபதிக்கு, சமீபத்தில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
24
Maharaja Movie Collect 100 Crores
இதில் முடி திருத்தும் தொழிலாளியாகவும். 16 வயது பெண்ணுக்கு அப்பாவாகவும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி வசூலை பெற்று தந்தது. இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் புச்சி பாபு, ராம் சரணை ஹீரோவாக வைத்து இயக்க உள்ள RC 16 படத்தில்... விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார். இதற்காக மிகப்பெரிய சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் விஜய் சேதுபதி. கதை பிடித்திருந்தும் ஏன் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
44
Vijay Sethupati Refused Ram Charan Movie
புஜ்ஜி பாபு இயக்குனராக அறிமுகமான 'உப்பென' படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்த நிலையில், RC 16 படத்திலும் ராம் சரணின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது. தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி 40 வயதை நெருங்க உள்ள ஹீரோ ஒருவருக்கு அப்பா வேடத்தில் நடித்தால்... அது தன்னுடைய இமேஜ்ஜை பாதிக்கும் என்கிற காரணத்தால், இப்படத்தில் நடிக்க முடியாது என தவிர்த்து விட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.