
சமீப காலமாக தனித்துவமான கதைகளை, வாழ்வியல் கண்ணோட்டத்தோடு திரைப்படமாக இயக்கி மிகக் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி இடத்திற்கு வந்த இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ்.
தன்னுடைய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, மாரி செல்வராஜுக்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்ததோடு, சிறந்த இயக்குனர் என்கிற பெயரையும் பெற்று தந்தது.
'தங்கலான்' வெற்றிக்கு விக்ரம் கொடுத்த மெகா விருந்தில் இடம்பெற்ற ஐட்டம்ஸ் என்னென்ன தெரியுமா?
இதைத்தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே நடிகர் தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்றார் மாரி செல்வராஜ். இந்த படம் கொடியன்குளம் சம்பவத்தை மையமாக வைத்து இயக்க பட்டிருந்தது. அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பின்னர், 'உதயநிதியை' வைத்து இவர் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியாகி, உதயநிதியின் கடைசி படமாக அமைந்ததோடு அவருக்கு மனதிருப்தியை அளித்த திரைப்படமாகவும் மாறியது.
தற்போது இவர் இயக்கிய, வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து, இயக்க உள்ளார். 'பைசன்' என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வரும் துருவுக்கு மாரி செல்வராஜ் முதல் வெற்றியை பெற்றுத்தருவாரா என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
வாழை படத்தின் ரிலீசுக்கு பின்னர், மாரி செல்வராஜ் பற்றிய பல விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், இவர் கார் ஓட்ட பழகியதன் பின்னணி குறித்து தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மாரி துணை இயக்குனராக இருந்தபோது, ஒரு முறை கார் ஓட்ட பழகியபோது அது விபத்தில் சிக்க, பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதாம். எனவே இனி என்ன நடந்தாலும் கார் ஓட்டக்கூடாது என முடிவு செய்துள்ளார்.
இவருடைய மனைவி எத்தனையோ முறை கார் ஓட்ட பழகும்படி கூறியும், அதனை தவிர்த்த மாரி செல்வராஜ் தன்னுடைய மகளுக்காக மீண்டும் கார் ஓட்டி பழகியதாக கூறியுள்ளார். ஒருமுறை இரவு நேரத்தில் தன்னுடைய மகளுக்கு காய்ச்சல் அடித்ததாகவும், அந்த சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கேப் புக் பண்ணியபோது அனைத்தும் கேன்சல் ஆகி உள்ளது. வேறு வழி இல்லாமல் குழந்தையை தன்னுடைய பைக்கில் வைத்தே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர், குழந்தைக்கு காச்சல் அடிக்கும் போது ஏன் பைக்கில் வைத்து அழைத்து வந்தீர்கள் என கேட்க, தன்னுடைய மகளுக்காகவாவது கார் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, மறுநாளே தயாரிப்பாளர் தாணுவின் ஆபிஸியில் இருந்த பழைய சாண்ட்ரோ காரை வாங்கி கார் ஓட்ட பழகியதாகவும், பின்னர் தன்னுடைய முதல் படம் வெற்றி பெற்ற பின்னர் தாணு சார் தான் தனக்கு முதல் காரை பரிசளித்தார் என்றும் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.