மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருப்பதாக மாரி செல்வராஜ் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார். இந்த நிலையில், வாழை திரைப்படம் தான் எழுதிய சிறுகதை தொகுப்பை ஒத்து இருப்பதாக கோவில்பட்டியை சேர்ந்த எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார்.
24
vaazhai
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், வாழை படம் நான் நேற்று தான் பார்த்தேன். அதற்கு முன்னரே நிறைய நண்பர்கள் போன் பண்ணி வாழை படம் பார்க்க சொன்னார்கள். என்ன விஷயம் என கேட்டபோது என்னுடைய சிறுகதை அதில் அப்படியே படமாக்கப்பட்டு உள்ளதாக சொன்னார்கள். அதன்பின்னர் தான் நான் படம் பார்த்தேன். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னரே நான் வழையடி என்கிற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதி இருந்தேன்.
வாழையடி வாழையாக சிறுவர்கள் படும் கஷ்டங்களை எழுதி இருந்தேன். அந்த சிறுகதையில் காட்சிப்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களும் வாழை படத்தில் இருக்கிறது. சினிமாவுக்காக ஒருசில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர, மற்றபடி அதில் உள்ள சிறுவர்களுடைய உழைப்பு, கூலி உயர்வு, ரஜினி, கமல் பனியன் போட்டுட்டு பண்ற எல்லாமே கிட்டத்தட்ட அதே தான். வாழைத்தார் சுமப்பதின் மூலமாக சிறுவர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்பது தான் நான் எழுதிய சிறுகதையிலும் உள்ளது, படத்தின் மையக்கருவும் அதுதான்.
44
Vaazhai Movie story Copied?
நான் அச்சு ஊடகத்தில் கொண்டுவந்தேன். அவர் காட்சி ஊடகத்தில் கொண்டு வந்திருக்கிறார் அவ்வளவுதான் வித்தியாசம். எனக்கு வாழை பற்றி எதுவுமே தெரியாது. என்னுடைய உறவினருக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைத்தோட்டம் நிறைய உள்ளது. அங்கு சென்று தங்கி தான் நான் இந்த சிறுகதையை எழுதினேன். அங்கு வேலைபார்க்கும் சிறுவர்களிடம் பேட்டி எடுத்து தான் எழுதினேன். ஒருவேளை என்னுடைய கதையை மாரி செல்வராஜ் படிக்காமல் கூட இருந்திருக்கலாம். நாங்கள் இருவரும் ஒரே பிரச்சனையை கையாண்டுள்ளதால் இரண்டுமே அச்சு அசல் ஒன்றாக இருக்கிறது என தர்மன் கூறி உள்ளார்.