கணவரோடு சேர்ந்து ப்ரியா அட்லீ தொடங்கிய புது பிசினஸ் - குவியும் வாழ்த்துக்கள்

First Published | Aug 29, 2024, 7:44 AM IST

இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியா தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கிய கையோடு அதன் லோகோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

Priya Atlee

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு தமிழ் படங்களும் வேறலெவல் ஹிட் அடித்தன. இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அட்லீ. அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

Atlee wife Priya

ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டில் பிசியாகிவிட்டார் அட்லீ. அங்கு தற்போது அவர் தயாரிப்பில் பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி.

இதையும் படியுங்கள்... 'தங்கலான்' வெற்றிக்கு விக்ரம் கொடுத்த மெகா விருந்தில் இடம்பெற்ற ஐட்டம்ஸ் என்னென்ன தெரியுமா?

Tap to resize

Priya Atlee new business

பேபி ஜான் திரைப்படம் தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் சமந்தா நடித்த கேரக்டரில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். பேபி ஜான் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இயக்குனர் தயாரிப்பாளர் என பிசியாக உள்ள அட்லீ, தற்போது தனது மனைவி ப்ரியா உடன் சேர்ந்து புது பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

Atlee Wife New Business

அட்லீயும் அவரது மனைவி ப்ரியாவும் சேர்ந்து ஆடை நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர். அதில் சொந்தமாக ஆடைகளை டிசைன் செய்து விற்பனை செய்ய உள்ளனர். அந்த நிறுவனத்துக்கு ரெட் நாட் என பெயரிட்டு உள்ளனர். நடிகை சமந்தாவும் இதேபோன்று சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், அதே பாணியில் ப்ரியா அட்லீயும் களமிறங்கி உள்ளார். அந்நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை நாளை முதல் தொடங்க உள்ளது. புது பிசினஸ் தொடங்கி உள்ள ப்ரியா அட்லீக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... 'கூலி' படத்தில் இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் கதாபாத்திரம் வெளியானது!

Latest Videos

click me!