'கூலி' படத்தில் இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் கதாபாத்திரம் வெளியானது!

Published : Aug 28, 2024, 07:41 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, 'கூலி' படத்தை இயக்கி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் நடித்து வரும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகர் சௌபின் ஷாஹிர் கதாபாத்திரம் குறித்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  

PREV
14
'கூலி' படத்தில் இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் கதாபாத்திரம் வெளியானது!
Coolie Movie Update

தளபதி விஜய்யை வைத்து, 'லியோ' படத்தை இயக்கி முடித்த கையோடு, லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றுவதை உறுதி செய்தார். இந்தப்படத்தின் பணிகள் இந்த ஆண்டு துவங்கிய நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். அவ்வப்போது இந்த படத்தில் அப்டேட் வெளியாகி வருகிறது.
 

24
Rajini Coolie movie

அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி இப்படத்தில் சத்யராஜ், கண்டன சூப்பர் ஸ்டார் உபேந்திரா, நடிகை ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன், ஷோபனா, உள்ளிட்ட பலர் நடிப்பது உறுதியாகி உள்ளது. இவர்களை தவிர மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான, சௌபின் ஷாஹிர்இணைந்து நடித்து வருகிறார்.

எல்லாம் பேசி வச்சு தான் நடக்குது! தமிழ் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லை குறித்து ஷகீலா ஷாக் தகவல்!
 

34
Coolie

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தற்போது லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, சௌபின் ஷாஹிர் கதாபாத்திரம் குறித்த தோற்றத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துளளார்.  ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

44
Dayal Character look

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு,  ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு  செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இந்த படத்தை... சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு வெளியாக உள்ள இப்படம் மூலம் 90'ஸ் ரஜினிகாந்தை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்த பெண்ணுக்கு... பிடிக்காமல் தாலி கட்டினேன்! மாரி செல்வராஜின் Untold திருமண ஸ்டோரி!

Read more Photos on
click me!

Recommended Stories