எல்லாம் பேசி வச்சு தான் நடக்குது! தமிழ் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லை குறித்து ஷகீலா ஷாக் தகவல்!

Published : Aug 28, 2024, 06:44 PM IST

கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் திரையுலகில் நடக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மீண்டும் பேசும்பொருளாகியுள்ள நிலையில், நடிகை ஷகீலா தமிழ் திரையுலகிலும் இதே போல் பாலியல் சர்ச்சை உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

PREV
14
எல்லாம் பேசி வச்சு தான் நடக்குது! தமிழ் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லை குறித்து ஷகீலா ஷாக் தகவல்!
Hema Committee

மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. இதில் மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட ஒரு கேங்கிடம் தான் உள்ளதாக கூறி, தங்களிடம் அத்து மீறி நடந்து கொண்ட சில நடிகர்களின் முகத்திரையை கிழித்துள்ளனர். நடிகர் ஜெயசூரியா, இயக்குனர் சித்திக், நடிகர் முகேஷ், நடிகர் திலீப், நடிகர் பாபு ராஜ் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள்.
 

24
Shakeela

இதை தொடர்ந்து தற்போது பிரபல கவர்ச்சி நடிகை ஷகீலா, மலையாள திரையுலகை போலவே... தமிழ் துறையிலும் பாலியல் தொல்லை இருப்பதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியுளளார்.  இது குறித்து பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நடிகை ஷகீலா கொடுத்துள்ள பேட்டியில்,"மலையாள திரையுலகில் இருப்பது போல தமிழிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கில் இதைவிட ஜாஸ்தியாகவே உள்ளது.

காதலித்த பெண்ணுக்கு... பிடிக்காமல் தாலி கட்டினேன்! மாரி செல்வராஜின் Untold திருமண ஸ்டோரி!
 

34
casting couch problem

ஆனால் ஹிந்தியை பொருத்தவரை, அப்படி அல்ல. அவர்கள் எடுத்த உடனேயே நண்பர்களாக மாறிவிடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சனை இருக்காது. ஆனால் அங்கு நெபாடிஸம் பிரச்சனை உள்ளது. அதாவது புதிய நடிகர்களை யாரையும் வளர விடாமல், தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக முயற்சிப்பது. போன்ற பிரச்சனை உள்ளது என கூறி உள்ளார்.

44
Shakeela About tamil industry

தெலுங்கில் எல்லாம் வேற லெவலில் இது போன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளதாகவும்... இவை அனைத்தும் ஆல்ரெடி பேசி வைத்து கொண்டு தான் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார் ஷகீலா. ஆரம்பத்திலேயே ப்ரொடியூசருக்கும், தனக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்க்கு ஒப்பு கொண்டு தான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்றமுடியாது என்பதால்... நடிகைகள் ஒத்துழைக்கு மறுப்பார்ப்பார். இதன் காரணமாக தான் பல பிரச்சனைகள் வருகிறது என்றும், ஆண்களுக்கு கண்டிப்பாக ஒரு வார்னிங் கொடுக்கப்பட வேண்டும் என இந்த பேட்டியில் ஷகீலா வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரபாபு முதல்.. யோகி பாபு வரை! அதிக சம்பளம் வாங்கிய காமெடி நடிகர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories