JP Chandrababu
சந்திரபாபு:
காமெடி வேடத்தில் நடிக்க துவங்கி, தன்னுடைய திறமையால் மிக குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை அடைந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி-க்கு நிகராக சம்பளம் பெரும் காமெடி நடிகராக இருந்தவர். அந்த காலத்தில் இவரே மற்ற காமெடி நடிகர்களை விட அதிகம் சம்பளம் பெரும் நடிகராக இருந்தார். காமெடியை தாண்டி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
Goundamani
கவுண்டமணி:
நாகேஷை தொடர்ந்து, பல காமெடி நடிகர்கள் வந்தாலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது செந்தில் - கவுண்டமணி காமெடி தான். செந்தில் குறைவான சம்பளமே பெற்றாலும், கவுண்டமணி பல படங்களில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளத்தை பெற்றுள்ளார்.
Santhanam:
சந்தானம்:
முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் சந்தானம். இவர் காமெடியனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில்... ஹீரோவாக புரோமோட் ஆனதும் 10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.
Soori
சூரி:
யோகி பாபுவை தொடர்ந்து, காமெடி மூலம் பிரபலமானவர் சூரி. 'விடுதலை' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்து, அடுத்தது கதையின் நாயகனாக கலக்கி வரும் சூரி... காமெடியனாக நடித்தபோது ஒரு படத்திற்கு 1 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெற்ற நிலையில், தற்போது ஹீரோவாக புரோமோட் ஆனதும், 10 கோடி வரை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது.