ரீ-ரிலீஸில் வெயிட்டாக வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள்!

First Published | Aug 28, 2024, 2:57 PM IST

முன்னணி நடிகர்களின் சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு மீண்டும் வசூல் வேட்டை நடத்திய நிலையில், அப்படி வெளியாகி அதிகமாக வசூலை அள்ளிய 5 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Gilli:

கில்லி:

தளபதி விஜய், இயக்குனர் தரணி இயக்கத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. திரிஷா ஹீரோயினாக நடித்திருந்த இந்த திரைப்படம், 'ஒக்கடு' என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முத்து பாண்டி என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டாரோ, அதேபோல் பிரகாஷ் ராஜின் கதாபாத்திரமும் அதிகம் ரசிகர்களை கவர்ந்தது.  விஜய் கபடி விளையாட்டு வீரராக நடித்திருந்த  இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில், 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி சுமார் 50 கோடி வசூலை அள்ளியது. விஜய்க்கு முதல் 50 கோடி வசூல் செய்த திரைப்படமாகவும் இது மாறியது. இந்த படம் கடந்த ஆண்டு மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அதிகபட்சமாக சுமார் 32.50 கோடி வசூல் செய்தது.

Dheena

தீனா:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித்தை வைத்து இயக்கி இருந்த திரைப்படம் தீனா. கேங்ஸ்டர் கதையம்சத்தில் வெளியான இந்த படத்தில், மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிகை லைலா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படம், 25 கோடிக்கு மேல் வசூல் செய்த செய்த நிலையில், இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு சுமார் 6.20 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

தளபதியின் த.வெ.க மாநாடு தேதி குறிச்சாச்சு! எங்கு - எப்போது? விஜய் போட்ட உத்தரவால் பரபரக்கும் பணிகள்!

Tap to resize

Vaaranam Aayiram

வாரணம் ஆயிரம்:

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் வாரணம் ஆயிரம், 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், அப்பா சூர்யாவுக்கு  ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்க, மகன் சூர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் குத்து ரம்யா ஆகியோர் நடித்திருந்தனர்.  காதல் மற்றும் எமோஷன் கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்தது. இந்தியா மற்றும் அமெரிக்கா முழுவதும் படமாக்கப்பட்ட இப்படம், சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த நிலையில்..  ஹாரிஸ் ஜெயராஜ் இசை அல்டிமேட் என ரசிகர்களால் புகழப்பட்டது.  சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் 5 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியது.
 

Baba Movie:

பாபா:

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி... தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருந்த திரைப்படம் 'பாபா'.  இந்த படத்தின் மூலம், தான் வணங்கி வரும் மகாவதார் பாபாஜி பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவே இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். கடந்த 2000-ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் படு தோல்வியை தழுவிய நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிஜிட்டல் வெர்ஷனில் வெளியாகி நான்கு கோடி ரூபாய் வசூல் செய்தது.

கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் பிரபல நடிகையை திரைப்படத்தில் இருந்து வெளியேற்றிய எம்ஜிஆர்!

3 Movie:

3:

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரொமான்டிக் சைக்கலாஜிக்கல் திரில்லராக எழுதி - இயக்கிய திரைப்படம் 3. கஸ்தூரிராஜா விஜயலட்சுமி இந்த படத்தை தயாரிக்க, ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்த இந்த படத்தில், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பிரபு, போன்ற பலர் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படம் வெளியான போது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது பெற்றாலும்... 45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. பின்னர் இப்படம் ரீ ரிலீஸ் 3.50 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!