தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் குஷி. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் தெலுங்கில் தோல்வியை சந்தித்தாலும், தமிழ்நாட்டில் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. குஷி படம் ரிலீஸ் ஆகி ஓராண்டாகியும் சமந்தா நடிப்பில் அடுத்த படம் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த ஓராண்டாக ஓய்வெடுத்து வருகிறார்.
24
samantha Latest Photos
சமந்தா மயோசிடிஸ் என்கிற நோய் பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில், அதில் இருந்து மீள்வதற்கான சிகிச்சையை கடந்த ஓராண்டாக எடுத்து வந்தார். இதனால் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. அவர் நடிப்பில் தற்போது சிட்டாடெல் என்கிற வெப் தொடர் தயாராகி உள்ளது. இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதனிடையே சமீபத்தில் நடிகை சமந்தா பிக்கல் பால் லீக்கில் பங்கேற்கும் சென்னை அணியை சொந்தமாக வாங்கி இருந்தார். பிக்கல் பால் அணியை வாங்கிய கையோடு, அந்த விளையாட்டை விளையாடியும் அசத்தி இருக்கிறார் சமந்தா. பிங்க் நிற உடை அணிந்து வேர்க்க விறுவிறுக்க சமந்தா பிக்கல் பால் விளையாடியபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
44
samantha Slim Look
சமந்தா பிக்கல் பால் ஆடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஏனெனில் அதில் மிகவும் ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் சமந்தா. சமந்தா இப்படி ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக மாறியது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துளியும் மேக்கப் இல்லாமல் சமந்தா எடுத்த அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.