இயக்குனர் ராமிடம் 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி' போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி... பின்னர் 2018 ஆம் ஆண்டு 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் மாரி செல்வராஜ். தன்னுடைய முதல் படத்தை, நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தியை வைத்து எதார்த்தமான கதைக்களத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை கண்முன் நிறுத்திய இவர் அந்த படத்திற்காக பாராட்டுகளையும் பெற்றார்.
27
Mari Selvaraj Debut movie
இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு தனுஷை வைத்து 'கர்ணன்' படத்தையும், 2023 ஆம் ஆண்டு உதயநிதியின் கடைசி திரைப்படமாக வெளியான 'மாமன்னன்' படத்தையும் இயக்கினார். இவர் இயக்கிய தன்னுடைய படங்களில் எல்லாம், தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை பற்றி பேசினார்.
இதை தொடர்ந்து சிறு வயதில், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை பேசும் விதமாகவும், ஓவ்வொரு வாழை தொழிலாளிகளுக்கு பின்னர் உள்ள வேதனையை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக, வாழை படத்தை இயக்கினார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வரும் நிலையில்... இந்த படத்திற்கான தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
47
Bison
வாழை படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் மாரி செல்வராஜ் தன்னுடைய மனைவி உடன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் முதல் முறையாக தன்னுடைய திருமணம் குறித்து, இதுவரை வெளியே சொல்லாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மாரி செல்வராஜ், திவ்யா என்பவரை காதலித்த நிலையில்... இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவருடைய முதல் மகள் 2018 ஆம் ஆண்டு பிறந்த நிலையில், மகன் 2021 ஆம் ஆண்டு பிறந்தார். மாரி செல்வராஜுக்கும் அவருடைய மனைவி திவ்யாவுக்கும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதில் சுத்தமாக விருப்பமே இல்லையாம். ஆனால் திவ்யாவின் அம்மா மிகவும் ஆசை பட்டதாலும், சொந்த பந்தங்களுக்காகவும் மட்டும் ஒரே ஒரு நாள் மாப்பிள்ளை வேடமிட்டு இருக்க சம்மதித்தாராம்.
67
Mari Selvaraj About Marriage
தன்னுடைய மனைவிக்கும் பெரிதாக தாலி கட்டி திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை என்றாலும், திருமணம் மூன்று நாள் இருக்கும்போது எனக்கு ஜாக்கெட் சரியில்லை, புடவை சரியில்லை, மேக்கப் சரியில்லை, என பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். இதன் அவருக்குள் இருந்த ஆசையை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என கூறினார். தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், தன்னைப் பொறுத்தவரை ஒரு பெண்ணை காதலிக்கிறோம் என்றால் அவரை எப்படி கை பிடித்தால் என்ன? என்பதுதான் என்னுடைய எண்ணம். தாலி என்பதை விருப்பமே இல்லாமல் தான் அவர் கழுத்தில் கட்டினேன் என கூறியுள்ளார்.
இவர்கள் இருவருக்குமே கடவுள் பக்தி இல்லை என்றாலும், தன்னுடைய மனைவியின் அம்மா ஆசை படி திருமணம் கோவிலில் நடந்ததாம். இதை தொடர்ந்து திவ்யா பேசும் போது... நான் எனக்காக கோவிலுக்கு செல்ல மாட்டேன். அதுவே என் மாமியார் கோவிலுக்கு கூப்பிட்டால் மறுக்காமல் போவேன். அதே சமயம் எங்களுடைய வீட்டில் பூஜை அரை இல்லை என தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜுக்கு பன்றி குட்டி என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால்... வீட்டின் சுவர்களில் அதிகம் பன்றிகள் படம் தான் இருக்குமாம். இவர் கூறியுள்ள இந்த தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.