'தங்கலான்' வெற்றிக்கு விக்ரம் கொடுத்த மெகா விருந்தில் இடம்பெற்ற ஐட்டம்ஸ் என்னென்ன தெரியுமா?

First Published | Aug 28, 2024, 9:36 PM IST

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான 'தங்கலான்' திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விக்ரம் மெகா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் பரிமாறப்பட்ட உணவுகள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Thangalaan

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரமின் கடுமையான உழைப்பில் வெளியான திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் நடிகை பார்வதி ஹீரோயினாக நடித்திருந்த நிலையில், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தங்கம் எடுக்க கட்டாயப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறையை ஒவ்வொரு ஃபிரேமில் மிடுக்காக காட்டி இருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
 

Vikram Thangalaan success Party

இந்நிலையில் நடிகர் விக்ரம், 'தங்கலான்' படம் உருவாக காரணமாக இருந்த துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த வெற்றி விழாவில் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். அதன்படி சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் விருந்து உபசரிப்பு நடந்தது.

'கூலி' படத்தில் இணைந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரின் கதாபாத்திரம் வெளியானது!

Tap to resize

Thangalaan Movie crew Participate

இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அவர்களை புன்னகையோடு வரவேற்ற விக்ரம் தன்னுடைய கைகளாலேயே அறுசுவை உணவை பரிமாறி மகிழ்ச்சியடைந்தார். அங்கு வந்திருந்த அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து கொண்டார்.

Malavika Mohanan And Parvathi

இதில், தங்கலான் படத்தில் நடித்த மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில்... இதில் மதம்பட்டி ரங்கராஜ் குழு வழங்கிய உணவு பட்டியல் பற்றி பார்க்கலாம்.

காதலித்த பெண்ணுக்கு... பிடிக்காமல் தாலி கட்டினேன்! மாரி செல்வராஜின் Untold திருமண ஸ்டோரி!

Food Items

வெல்கம் டிரிங்காக வாட்டர்மெலன் ஜிஞ்சர் ஜூஸ் மற்றும் பைனாப்பிள் மேங்கோ மின்ட் ஜூஸ் வழங்கப்பட்டது. இனிப்புகள்... பூசணி அல்வா, லிச்சி சாண்டிஸ், மற்றும்  இளநீர் பாயாசம் இடம்பெற்றன.

Vikram Distribute Foods

ஸ்டார்ட்டர்ஸ், மட்டன் சாப்ஸ், கருவேப்பிலை வஜ்ரம் ஃபிஷ் ஃப்ரை, இறால் நெய் வறுவல், ஈரோடு ஸ்பெஷல் பிச்சுப்போட்ட கோழி மிளகு வறுவல், சிக்கன் குழம்பு கலக்கி, வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் பிஷ் ஃப்ரை, ஜலபினோ சீஸ் சமோசா மற்றும் சாஸ் ஆகியவை இடம்பெற்றன.

கிண்டி அருகே நடிகர் சம்பத் ராம் சென்ற கார் விபத்து! நடிகரின் தற்போதைய நிலை?

Food Menu reveled

மெயின் டிஷ்ஷாக விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, மஸ்ரூம் பள்ளிபாளையம் கிரேவி, ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் விச் சிக்கன் தம் பிரியாணி ,மினி பன் தோசை, தேங்காய் சட்னி, இஞ்சி காரச் சட்னி, சாம்பார், ஆந்திரா மீன் கறி, வெஜ் பிஷ் கரி, ஹாட் பெப்பர் கார்லிக் ரசம் சாதம்,  கிரீமி தயிர் சாதம் வித் ஃப்ரைடு ஆனியன், மாங்காய் ஊறுகாய் ஆகியவை பரிமாறப்பட்டன. டெசர்ட்டாக  சுலைமானி டீ, ஐஸ்கிரீம், மகா பீடா ஆகியவை கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!