பணத்தை பதுக்குகிறார்... அவர் ஒரு குப்பை - யோகிபாபுவை சரமாரியாக சாடி சவால்விட்ட வலைப்பேச்சு

First Published | Aug 29, 2024, 9:54 AM IST

வலைப்பேச்சு பத்திரிகையாளர்கள் மீது யோகிபாபு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அதற்கு அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Yogibabu vs Valaipechu

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்திருக்கும் யோகிபாபு, பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் யோகிபாபு. அதிலும் யோகிபாபு கால்ஷீட் கொடுத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வர மறுப்பதாகவும், இதனால் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் யோகிபாபு மீது வலைப்பேச்சு யூடியூப் சேனலில் விமர்சித்தனர்.

yogibabu

அவர்களின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் பேட்டி ஒன்றை அளித்த யோகிபாபு, தான் கவனிக்கவில்லை என்பதால் அவர்கள் தன்னைப்பற்றி விமர்சிப்பதாகவும், அவர்களுக்கு பணம் கொடுத்து திருப்திபடுத்தவில்லை என்றால் இப்படிதான் பேசுவார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் வலைப்பேச்சு என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அவர்களை தான் விமர்சித்துள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

இதையும் படியுங்கள்... கணவரோடு சேர்ந்து ப்ரியா அட்லீ தொடங்கிய புது பிசினஸ் - குவியும் வாழ்த்துக்கள்

Tap to resize

Valaipechu Anthanan

யோகிபாபுவின் இந்த குற்றச்சாட்டுக்கு வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அவரைப்பற்றி பல ஷாக்கிங் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். யோகிபாபு ஒரு குப்பை என விமர்சித்துள்ள அவர்கள், யோகிபாபு சொன்னது அனைத்தும் பொய் அவர் உண்மை என நிரூபித்துக்காட்ட கோவிலில் வந்து சத்தியம் செய்யக் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். அவரும் நாங்கள் பணம் வாங்கியது உண்மை என்று சத்தியம் பண்ணி சொல்வாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Valaipechu Bismi

அதுமட்டுமின்றி யோகிபாபு ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கி வருவதாகவும், அதில் 5 லட்சத்தை மட்டும் கணக்கு காட்டிவிட்டு மீதி 20 லட்சம் பணத்தை கருப்பு பணமாக பதுக்கி வருவதாக ஒரு பகீர் குற்றச்சாட்டை வலைப்பேச்சு பிஸ்மி முன்வைத்துள்ளார். மேலும் அஜித் தன்னை தொடக்கூடாது என சொன்னதாக யோகிபாபு தான் தங்களிடம் வந்து கூறியதாகவும் சொல்லி இருக்கிறார்கள். வலைப்பேச்சு விடுத்த சவாலை யோகிபாபு ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... காப்பியடித்தாரா மாரி செல்வராஜ்? வாழை படத்தின் கதை என்னுடையது - புயலை கிளப்பிய எழுத்தாளர்

Latest Videos

click me!