'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Aug 29, 2024, 06:37 PM IST

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், உருவாகியுள்ள 'விடுதலை பார்ட் 2' படத்தின் ரிலீஸ் தேதியை சற்று முன் அறிவித்துள்ளது படக்குழு.  

PREV
14
'விடுதலை 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Viduthalai Part 2

கமர்ஷியல் படங்களை தாண்டி, வாழ்வியலை எடுத்து கூறும் வகையில் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து படம் இயக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே உள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில், சூரி ஹீரோவாக நடித்து கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை.

24
Vetrimaran Movie

சூரி, (குமரேசன்) என்கிற கான்ஸ்டபிளாக நடித்திருந்த நிலையில், இவருக்கு ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடித்திருந்தார். விஜய் சேதுபதி மக்கள் படை தலைவர் பெருமாள் "வாத்தியார்" என்கிற லீடு ரோலில் நடித்திருந்தார். பெருமாள் வாத்தியாரின் மனைவி கதாபாத்திரத்தில், மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர் குறித்த காட்சிகள் முதல் பாகத்தில் இடம்பெறாத நிலையில், இரண்டாம் பாகத்தில் இடம்பெற உள்ளன. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், அனுராக் காஷ்யப், கிஷோர், சேத்தன், ராஜூவ் மேனன், கென் கருணாஸ், போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அப்பா விஜயகுமாரின் 81-ஆவது பிறந்தநாள்! மகன் - மகள்களோடு சாமி தரிசனம்! வைரல் போட்டோஸ்!

34
Soori

இந்த திரைப்படம், ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூரி தன்னுடைய வெறித்தனமான ட்ரான்ஸ்ஃபர்மேஷனை வெளிப்படுத்தி ஒரு எதார்த்தமனா ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இயக்குனர் வெற்றி மாறனும், சூரியின் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரியை நோக்கி அவரை ஹீரோவாக வைத்து எடுக்க நிறைய இயக்குனர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர் நடித்த, கருடன், மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

44
viduthalai 2

விடுதலை 2 படத்தின் அணைத்து பணிகளும் முடிந்து... ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விடுதலை 2-ஆம் பாகத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு குட் நியூஸாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொல்லையை எதிர்கொள்ள நடிகைகள் இதை செய்யலாம்! ஊர்வசி கொடுத்த சூப்பர் ஐடியா?
 

Read more Photos on
click me!

Recommended Stories