தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், வருகின்ற சட்டமன்ற (2026ம் ஆண்டு) தேர்தலில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அரசியல் தலைவர் தளபதி விஜய், இப்போது தனது 68வது திரைப்பட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட தனது 69வது திரைப்பட பணிகள் முடிவடைந்ததும், சினிமா பயணத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவர் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க உள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்த சூழலில் தற்பொழுது தளபதி விஜய் நடித்து வரும் இந்த 68வது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்று இந்த திரைப்படத்திற்கு தலைப்பு வைத்த நாளிலிருந்து, தொடர்ச்சியாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் பல சுவாரசியமான அப்டேட்களை இந்த திரைப்படத்தில் இருந்து கொடுத்துக்கொண்டே வருகிறார்கள்.
34
Captain Vijayakanth
ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு அண்மையில் இப்பட ட்ரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டு சிறப்புகளாக, மறைந்த நடிகை பாவதாரிணியின் குரல் Artificial Intelegence தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த், இந்த திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளார்.
44
Trisha in 4th Single
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்திலிருந்து நான்காவது சிங்கிள் பாடல் வெளியாகும் என்று இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் மீண்டும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாடலில் தளபதி விஜயோடு இணைந்து நடிகை திரிஷா நடனமாடியுள்ளதாக சில தகவல்கள் வலம்வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.