காற்று வாங்கும் மாடர்ன் உடை.. கவர்ச்சியில் தாராளம் காட்டும் வேதிகா - ஹாட் பிக்ஸ்!

First Published | Aug 29, 2024, 10:29 PM IST

Actress Vedhika : மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்திருந்தாலும் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட நடிகை தான் வேதிகா. இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தது மும்பையில் தான்.

Vedhika Photoshoot

மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை வேதிகா, பல விளம்பர திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிரபல நடிகர் சூர்யாவோடு இணைந்து அவர் நடித்த ஒரு விளம்பர படம் வரவேற்பை பெற்ற நிலையில், இவருக்கு திரைத்துறையில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2006ம் ஆண்டு வெளியான அர்ஜுனனின் "மதராஸி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

Actress Vedhika

தொடர்ச்சியாக தமிழில் "முனி", "சக்கரகட்டி", "காலை" மற்றும் "மழை மழை" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற வேதிகாவிற்கு, மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ஒரு திரைப்படம் என்றால் அது இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான "பரதேசி" என்கின்ற திரைப்படம் தான். கதையின் நாயகியாக "அங்கம்மா" என்கின்ற கதாபாத்திரத்தில் அவர் அப்படத்தில் நடித்திருந்தார்.

Tap to resize

Vedhika

தொடர்ச்சியாக மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் வேதிகா, இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு வெளியான "காஞ்சனா" படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் முதல் பாகத்தில் அவர் ராகவா லாரன்ஸ்க்கு நாயகியாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

kollywood Actress Vedhika

இந்த 2024ம் ஆண்டு மட்டும் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 8க்கும் மேற்பட்ட படங்களில் அவர் தற்பொழுது நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடிப்பில் "ராசாக்கர்" என்கின்ற தெலுங்கு திரைப்படம் இவ்வாண்டு துவக்கத்தில் வெளியானது.

சிறகடிக்க ஆசையை அடித்து பறக்கவிட்ட சன் டிவி தொடர்கள்! இந்த வார டாப் 10 TRP லிஸ்ட் இதோ!

Latest Videos

click me!