நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகி இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. கோட் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அப்படத்தின் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
24
TVK Vijay
கோட் பட ரிலீஸ் ஒருபுறம் இருக்க தன்னுடைய கட்சி வேலையிலும் செம்ம பிசியாக உள்ளார் விஜய். அவர் தளபதி 69 படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சிக்கான கொடி அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது. அதில் போர் யானை மற்றும் வாகை மலருடன் கூடிய தனது கட்சிக் கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். அந்தக் கொடியை தமிழகம் முழுவதிலும் உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் தங்கள் பகுதிகளில் ஏற்றி உள்ளனர்.
படம் ரிலீஸ் ஆகும் முன் ஆடியோ லாஞ்சில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் விஜய், இம்முறை கோட் படத்திற்காக ஆடியோ லாஞ்சும் நடத்த வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார். அதுமட்டுமின்றி லியோ போன்று சக்சஸ் மீட் நடத்திக் கொள்ளும் ஐடியாவில் தளபதி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கோட் பட ரிலீஸை ஒட்டி நடிகர் விஜய் இன்று காலை திடீரென தனி விமானம் மூலம் மகாராஷ்ட்ராவுக்கு கிளம்பி சென்றார்.
44
Vijay vsit Shirdi saibaba temple
அங்கிருந்து ஷீரடிக்கு சென்ற அவர், சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். வழக்கமாக ரஜினி தான் தன் படங்கள் ரிலீஸ் ஆகும் முன் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். தற்போது விஜய்யும் அதே பார்முலாவை பின்பற்றி ஷீரடிக்கு சென்றிருக்கிறார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு சென்னையில் தன்னுடைய சொந்த செலவில் சாய் பாபா கோவிலை கட்டினார். அந்த கோவில் சென்னையை அடுத்த கொரட்டூரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.