கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை; நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார்!

First Published | Aug 30, 2024, 3:23 PM IST

நடிகர் ஜெயசூர்யா மீது ஏற்கனவே ஹேமா கமிட்டியில் வெளியிட்ட அறிக்கையில் ஒரு நடிகை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மேலும் ஒரு நடிகையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

Actor Jayasurya

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயசூர்யா... சில மலையாள நடிகைகளிடம் அத்து மீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து நடிகைகள் புகார் கூறி வருகிறார்கள். ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கையில் கொச்சியை சேர்ந்த நடிகை ஒருவர் புகார் கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து மேலும் ஒரு நடிகை ஜெயசூர்யா பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டாவது முறையாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

Sexual Harassment complaint

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த நடிகை, தொடுபுழாவில் உள்ள ஒரு திரைப்பட தளத்தில் ஜெயசூர்யா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரம் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், விரைவில் இந்த வழக்கு மேல் விசாரணைக்காக தொடுபுழா காவல்துறைக்கு மாற்றப்படும் என்றும் இதனை, ஐபிஎஸ் அதிகாரி ஐஸ்வர்யா டோங்ரே தலைமையிலான குழு விசாரணை செய்யும் என கூறப்படுகிறது.

முதல் குழந்தையை வரவேற்க 100 கோடியில் புதிய வீடு வாங்கிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்! எங்கு தெரியுமா?
 

Tap to resize

One More complaint against Jayasurya

அதே போல் திருச்சூரில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவும் இந்த வழக்கை விசாரிக்கும் என கூறப்படுகிறது. கொச்சியைச் சேர்ந்த நடிகை ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, ஜெயசூர்யா மீது மீண்டும் தொடரப்பட்ட இரண்டாவது வழக்கு என்பதால், மலையாள திரையுலகில் இந்த விவகாரம் பற்றி எரிந்து வருகிறது.

Police Investigation:

மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள கண்டோன்மென்ட் போலீசார், ஜெயசூர்யா மீது நடிகை அளித்த புகாரின் பேரில், ஐபிசி 354 (பெண்களை அடக்குமுறைக்கு உற்படுத்துதல் ), 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்), 509 (பெண்ணை அவமதித்தல்) உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்ற நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீதும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாடர்ன் சரோஜா தேவியாக மாறி... சைடில் ஒத்த ரோசாவோடு போஸ் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!

Jayasurya Tamil movies

நடிகர் ஜெயசூர்யா மலையாள படங்கள் மட்டும் இன்றி சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, என் மன வானில், வசூல் ராஜா MBBS போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்.

Latest Videos

click me!