அரண்மனை 4 முதல் தங்கலான் வரை - 2024ல் 100 கோடி பாக்ஸ் ஆஃபீஸில் இணைந்த படங்கள்!

First Published | Aug 30, 2024, 4:59 PM IST

Kollywood Movies : இந்த 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான பல திரைப்படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றி திரைப்படங்களாக மாறியுள்ளது.

Aranmanai 4

இவ்வருட துவக்கம் கோலிவுட் உலகிற்கு பெரிய அளவில் வெற்றிகளை தரவில்லை என்றாலும், இவ்வாண்டின் இரண்டாம் பாதி வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. அந்த வகையில் கடந்த மே மாதம் 3ம் தேதி இந்திய அளவில் வெளியாகி, சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்து, வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது இயக்குனர் சுந்தர் சி-யின் அரண்மனை 4 திரைப்படம்.

கமல் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி? பரபரப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 8 ப்ரோமோ ஷூட்டிங்!

Maharaja Movie

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி இந்திய அளவில் வெளியான திரைப்படம் தான் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனின் "மகாராஜா" என்கின்ற திரைப்படம். இது நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் 108 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம்.  
 

Tap to resize

Indian 2

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தான் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி வெளியாகி உலக அளவில் 151 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது. இருப்பினும் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சங்கர் ஆகிய ஜாம்பவான்களினுடைய திரைப்படம் என்று வரும் பொழுது, இது மிகவும் குறைந்த வசூலாகவே பார்க்கப்படுகிறது. 
 

Raayan Movie

கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி உலக அளவில் வெளியாகி இப்போது, ஓடிடி தளத்திலும் கலக்கி வரும் திரைப்படம் தான் "ராயன்". இயக்குனர் தனுஷின் இரண்டாவது திரைப்படமாக வெளியான இப்படம், உலக அளவில் சுமார் 158 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியுள்ளது. இந்த வெற்றிக்கு ரஹ்மானின் இசையும் பெரிய அளவில் உதவியது என்றே கூறலாம்.

Thangalaan Movie

கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகி தற்பொழுது உலக அளவில் 100 கோடி ரூபாய் என்கின்ற வசூலை கடந்து வெற்றி திரைப்படமாக பயணித்து வருகிறது இயக்குனர் பா ரஞ்சித்தின் "தங்கலான்" திரைப்படம். இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று. வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து, மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை விக்ரம் நிரூபித்த படமிது.

நம்பர் மட்டும் தான் டைட்டில்.. புது முயற்சியில் வெளியான டாப் 6 கோலிவுட் படங்கள்!

Latest Videos

click me!