திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய அடுத்த மரணம்! பல சூப்பர் ஹிட் படங்களின் கலை இயக்குனர் ஆர்.ராதா காலமானார்!

First Published | Feb 14, 2023, 1:48 PM IST

பழம்பெரும் கலை இயக்குனரான ஆர்.ராதா, சமீப காலமாக உடல்நல குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார். இவரின் இறப்பு திரையுலகை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

சமீப காலமாகவே அடுத்தடுத்து நிகழ்ந்து வரும், பல எதிர்பாராத மரணங்கள் ரசிகர்களையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது, எம். ஜி.ஆர்.சிவாஜி, ஜெயலலிதா, ஜெய்சங்கர் முத்துராமன், சிவக்குமார், கமலஹாசன், ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர் நடிகையர் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் R.ராதா மரணம் தற்போது நிகழ்ந்துள்ளது . 

பழம் பெரும் கலை இயக்குனரான ஆர். ராதா, கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு காரணமாகவும், உடல் நல பிரச்சனைகள் காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று 14.2.2023 விடியற்காலை 3.30 மணி அளவில் காலமானார். உடல்நலம் சரியில்லாமல் இருந்த காரணத்தினால், இவரது குடும்பத்தினர் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

விரைவில் திருமணம்... அமீருடன் காதலர் ரொமான்டிக்காக கொண்டாடி அதகளம் செய்த பாவனி! போட்டோஸ்!

Tap to resize

88 வயதாகும் மூத்த கலை  இயக்குனர் ராதாவிற்கு, லீலாவதி (74 )என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர்.  ஆர்,ராதா முக்தா சீனிவாசன், SP முத்துராமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் பணியாற்றி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 

குறிப்பாக இவர் பணியாற்றிய எம்.ஜி.ஆர். நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய்  , அடிமைப்பெண் படங்களிலும் சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ஜெயலலிதா முத்துராமன் நடித்த சூர்யகாந்தி, கமலஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்காரவேலன், ரஜினிகாந்த் நடித்த பில்லா, சிவப்புச்சூரியன், நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், போன்ற போன்ற 75 க்கு மேற்பட்ட படங்கள் கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இவர் ஆர்ட்டைரக்டர் அங்கு முத்துவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

'லியோ' படப்பிடிப்பு தளத்தில் ஒரு கருப்பு ஆடு! லீக் காண காட்சியால் உச்சகட்ட அதிர்ச்சியில் படக்குழு!

தற்போது இவரின் உடல் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இவரின், வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை இறுதிச்சடங்குகள் நூங்கம்பாக்கம் சுடுகாட்டில் நடைபெற உள்ளதாக, குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Latest Videos

click me!