தற்போது சுதந்திர பறவைகளாக தங்களுடைய காதலை அனுபவித்து வரும் அமீர் - பாவனி ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதை, அமீர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் தங்களுடைய திருமண தேதியை இந்த ஜோடி வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது காதலர் தின புகைப்படங்களை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.