தமிழ் திரையுலகில் பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. இவர் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் வந்தாலும், வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. தற்போது இவர் கைவசம் மிஷ்கினின் பிசாசு 2 திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா தான் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.