நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!

First Published | Aug 26, 2023, 10:49 AM IST

நடிகர் விஜயகுமாரின் பேத்தி, தியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை தியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 

Diya Engagement

பழம்பெரும் நடிகர், விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள் தியாவுக்கு, தற்போது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் வனிதா விஜயகுமாரை தவிர, விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

Diya Engagement

பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.  முதல் மனைவியான முத்துக்கண்ணு அனுமதியோடு தான், நடிகை மஞ்சுளாவை விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் விஜயகுமாருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அதே போல் இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம், விஜயகுமாருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

Biggboss 7: 'பிக்பாஸ் சீசன் 7 'நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் பட நடிகை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!


Diya Engagement

முதல் மனைவியின் மகள்களான அனிதா - கவிதா இருவருமே திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டனர். மகன் அருண் விஜய், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

Diya Engagement

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவருமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டனர். இவர்களின் வனிதாவின் வாழ்க்கை மட்டுமே, சில சர்ச்சைகளுக்கு ஆளான நிலையில், ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக ஒட்டுமொத்த குடும்பமே... இவரை ஒதுக்கி விட்டது.

கதிர் என நினைத்து சக்தியிடம் மொத்த உண்மையை உளறிய வளவன்! 'எதிர்நீச்சல்' சீரியலின் பரபரப்பான அப்டேட்!  

Diya Engagement

இந்நிலையில் தற்போது விஜயகுமாரின் மூத்த மகளான அனிதாவின் மகள், தியாவுக்கு தான் மிகவும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில், விஜயகுமாரின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். 

Diya Engagement

இதுகுறித்த புகைப்படங்கள் சில ஏற்கனவே வெளியான நிலையில், பலரும் அனிதா கட்டிய புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் என்றே நினைத்தனர். ஆனால் தற்போது தியா தன்னுடைய சமூக வலைத்தளத்தில், நிச்சயதார்த்தம் நடந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி வீட்டு வரலட்சுமி நோம்பு எப்படி இருக்குனு பாருங்க..! வைரலாகும் போட்டோஸ்..!

Diya Engagement

வருங்கால கணவருடன் ரொமான்டிக்காக எடுத்த சில புகைப்படங்களையும், தியா வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் மாப்பிள்ளை யார் என்பது புகைப்படம் மூலம் தெரிய வந்திருந்தாலும், அவர் என்ன செய்கிறார்... இது காதல் திருமணமா? அல்ல பெற்றோர் முடிவு செய்த திருமணமா? என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!