சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே சிம்பு - கெளதம் மேனன் கூட்டணியில் வெளியாகியுள்ள இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் அந்த வெற்றிப்பட லிஸ்டில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
பி. ஜெயமோகன் எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை, தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், இந்த படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது தெரிந்தது. கஷ்டப்படும் பின்னணியில் இருந்து ஒருவன் சிட்டிக்கு வர, கேங் ஸ்டார் கும்பல்களிடம் மாட்டி கொள்ள, பின் எப்படி அவரும் கேங் ஸ்டாராக மாறுகிறார் என்பதை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.
மேலும் செய்திகள்: 54 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத எஸ்.ஜே.சூர்யா..! ஏன்... முதல் முறையாக போட்டுடைத்த உண்மை!
இந்த படத்தின் முதல் பாகம், நாளை வெளியாகவுள்ள நிலையில்... இதில் ராதிகா சரத்குமார் , சித்திக் , நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சித்தி இத்னானி நாயகியாக நடித்துள்ளார்., இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.