சமீபத்தில் தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று படத்தில் நாயகியாக நடித்திருந்தார் அபர்ணா பாலா முரளி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் தொடர்ந்து சர்வம் தாளமயம் படத்தில் நடித்த இவருக்கு சுதா கொங்கார இயக்கிய சூரரைப் போற்று படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாயகனின் மனைவி பொம்மியாக தோன்றி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் அபர்ணா பால முரளி.
24
Aparna Balamurali
தொடர்ந்து தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள அபர்ணா தற்போது மலையாளத்தில் ஆறு படங்களையும் தமிழில் நித்தம் ஒரு வானம் என்னும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நாயகிகள் போல் அல்லாமல் இவர் சற்று உடல் எடை கூடி காணப்படுவதால். அபர்ணா குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது எழுவது வழக்கம் ஆகிவிட்டது.
இந்நிலையில் இதுபோன்ற கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் பதிலளித்த அபர்ணா, ஒருவரின் எடை அதிகரிப்பது என்பது அவரின் உடலில் உள்ள பிரச்சனைகள் காரணமாக ஏற்படுகிறது. நான் இப்படி குண்டாக இருந்தாலும் இதே தோற்றத்துடன் என்னை படத்தில் நடிக்க அழைப்பவர்கள் ஏராளம்.
ஆனாலும் சிலர் ஒல்லியான நடிகைகளை மட்டுமே ஹீரோயின்களாக பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்றவரின் திறமைக்கு முன்னால் தோற்றம் ஒரு பொருட்டே அல்ல. ஹீரோக்களுக்கு மட்டும் இவ்வாறு பாகுபாடு பார்க்காத சினிமாவில், ஹீரோயின்களுக்கு என்று வந்தவுடன் உடல் தோற்றத்தை பார்க்கிறார்கள்.. மேலும் என்னை அம்மாவாக நடிக்கிறீர்களா? என்று கூட கேட்டுள்ளார்கள். மேலும் ஒல்லியாக இருந்தால் மட்டும்தான் கதாநாயகி வாய்ப்பு வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆவேசமாக பேசி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.