நந்தா, சேது, பிதாமகன், நான் கடவுள் என பிளாக்பஸ்டர் படங்களை தமிழுக்கு கொடுத்த இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் படத்தை இயக்கி வருகிறார். தொடர் தோல்விகளுக்கு பிறகு தற்போது சூர்யாவுடன் கை கொர்த்துள்ளார் பாலா. ஆனால் இந்த படத்திலும் பல பிரச்சனைகள் உள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது. அதோடு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
24
director bala
பின்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதை படக்குழு உறுதி செய்தது. இந்நிலையில் இயக்குனர் பாலா மீது தயாரிப்பாளர் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பிதாமகன் திரைப்படத்தை தயாரித்த வி ஏ துரை தான் பாலா மீது புகார் தெரிவித்துள்ளார்.
விக்ரம், சூர்யா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்த பிதாமகன் படத்தை நீயே வி ஏ துரை தான் தயாரித்திருந்தார். படம் விமர்சன ரீதியில் நல்ல வெற்றி கண்டதோடு ,விருதுளையும் குவித்து இருந்தது. இருந்தபோதிலும் படம் எதிர்பார்த்த அளவு லாபத்தை கொடுக்கவில்லை. மாறாக பட்ஜெட்டை விட மிகக் குறைந்த அளவை வசூல் செய்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு மற்றொரு படத்தை இயக்கி தருவதாக பாலா தெரிவித்திருந்தார். அதற்காக 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் ஆகவும் விஏ துரையிடமிருந்து பெற்றுக் கொண்டாராம்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழிந்தும் தனக்கு படம் இயக்கி தராததால் பாலாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் தயாரிப்பாளர். அதற்கு சரியான பதிலை கூறாத இயக்குனர் தனது உதவியாளர்களை வைத்து தயாரிப்பாளரை தனது அலுவலகத்தில் இருந்து வெளியே துரத்தி விட்டாராம். இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட காவலர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் தயாரிப்பாளர் சங்கமும் இது குறித்து பேசியுள்ளதாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.