விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?

Published : Sep 14, 2022, 03:41 PM IST

ஷபானா, ரேஷ்மா  இருவரும்  இணைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

PREV
14
விக்ரம் பிரபு படத்தில் அறிமுகமாகும் சீரியல் நாயகிகள்..யாரெல்லாம் தெரியுமா?
pagaiye kathiru

பிரபல நடிகர் பிரபுவின் மகனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனுமான விக்ரம் பிரபு தற்போது முன்னணி நாயகர்களின் ரேஸில் உள்ளார். மூன்றாவது தலைமுறை நடிகரான இவர் கும்கி படம் மூலம் திரையுலக்கிற்கு அறிமுகம் ஆனார். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படம் சமீபத்தில் தான் தமிழ் திரைப்பட விருதை வென்றெடுத்தது. சிறந்த நாயகனுக்கான விருதை விக்ரம் பிரபு பெற்றிருந்தார்.

24
pagaiye kathiru

இதை அடுத்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை, இது என்ன மாயம், வீர சிவாஜி, சத்ரியன், நெருப்புடா, துப்பாக்கி முனை, வானம் கொட்டட்டும், அசுரகுரு, புலிக்குத்தி பாண்டி என பல படங்களில் நடித்து விட்டார் இதில் இறுதியாக டானாக்கரன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகியிருந்தது. இந்த படங்கள் எதுவுமே கும்கி அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும்..

மேலும் செய்திகளுக்கு..பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு 

தற்போது பாயும் ஒளி நீ எனக்கு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் பிரபு பொன்னியின் செல்வனில்  ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். பார்த்திபேந்திர பல்லவன் வேடத்தில் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

34
pagaiye kathiru

 இதோடு தற்போது பகையே காத்திரு என்னும் படத்திலும் இணைந்துள்ளார் விக்ரம் பிரபு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பூஜை போடப்பட்ட இந்த படத்தின் தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலைகள் பிரபல சீரியல் நடிகைகள் இரண்டு பேர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...வடிவேலுடன் கேக் வெட்டி கொண்டாடிய உதயநிதி ..முக்கிய அப்டேட்டை வெளியிட்ட மாமன்னன் படக்குழு

அதாவது ஜீ தமிழில் செம்பருத்தி நாடகத்தின் மூலம் பிரபலமான ஷபானா மற்றும் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் பிரபலமான ரேஷ்மா இருவரும் பகையே காத்திரு படத்தில் நடிக்க உள்ளனராம். செம்பருத்தி சீரியல் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தவர் ஷபானா இவர் தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
pagaiye kathiru

அதேபோல ஜீ தமிழில் பூவே பூச்சூடவா மூலம் பிரபலமான ரேஷ்மா அதே சீரியலில் நடித்த மதனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சேர்ந்து கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்னும் சீரியலில் நடித்து வந்தனர். அந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. தற்போது நெரிங்கிங் தோழிகளான ஷபானா, ரேஷ்மா  இருவரும்  இணைந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாக இருப்பது குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதோடு அவர்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இதுகுறித்தான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு...40 களை கடந்தும் கட்டுக்கடங்காத கவர்ச்சி..கண்களை கூச வைக்கும் கிரண்

Read more Photos on
click me!

Recommended Stories