பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிவிட்டார் அமலாபால். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான மைனா படம் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். அவர் தமிழில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த பட்மும் இதுதான். இப்படத்தின் வெற்றிக்கு பின் அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட வாய்ப்புகளும் வந்தன. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு நாக சைதன்யா நடிப்பில் வெளியான் பெஜவாடா என்கிற படத்தின் மூலம் டோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் அமலா பால், இதையடுத்து அவருக்கு அங்குள்ள முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நானி ஆகியோருடன் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது.
அதன்படி அவர் கூறியதாவது : “நான் தெலுங்கு படங்களில் நடித்தபோது, அந்த திரையுலகம் குறிப்பிட்ட குடும்பத்தினர் பிடியில் இருப்பதை உணர்ந்தேன். நான் நடித்த சமயத்தில் தெலுங்கு படங்களே வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்தில் குறைந்தது 2 ஹீரோயின்களாவது இருப்பார்கள். அவர்களை பாடல்களுக்கும், காதல் காட்சியில் நடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தினர்.