கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சீரியலில் சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் கண்ணன் என நான்கு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் சிறுவர்களாகராக இருக்கையில் சத்தியமூர்த்தி திருமணம் செய்து கொண்ட தனம் எவ்வாறு தனது குடும்பத்தை வழி நடத்துகிறார் என்பதே இதன் மையக்கருத்தாக இருந்தது.
24
pandian stores
குன்றக்குடியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸில் மூத்த மகனான சத்தியமூர்த்தி மற்றும் தனம் இருவரும் ஜீவா, கதிர், கண்ணன் என மூன்று சகோதரர்களையும் வளர்கின்றனர். அவர்கள் வளர்ந்ததும் மீனா, முல்லை மற்றும் ஐஸ்வர்யா என மூன்று மருமகள் வீட்டிற்கு புதிதாக பிரவேசிக்க இவர்கள் அனைவரையும் அரவணைத்து தனம் எவ்வாறு கூட்டுக் குடும்பமாகவே இதனை நடத்தி வருகிறார் என்பதை ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்து வந்தது இந்த சீரியல். அதோடு மறைந்த வி ஜே சித்ராவுக்கு அதிக பிரபலம் கொடுத்ததும் இந்த சீரியல் தான்.
வீனஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரித்த இந்த சீரியலை சிவசேகர் 550 எபிசோடுகளையும் டேவிட்சர்லி 551 எபிசோடுகளில் இருந்து தற்போது வரையும் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், வெங்கட் ரங்கநாதன், ஹேமா, ராஜ்குமார் குமரன், தங்கராஜன், காவிரி அறிவுமணி, சரவணன் விக்ரம், சாய் காயத்ரி என பலர் நடித்து வருகின்றனர்.
தற்போது கூட்டுக்குடும்பத்திலிருந்து கதிர் மற்றும் முல்லை இருவரும் தனி குடுத்தனம் சென்று விடுகின்றனர். அதோடு அவர்கள் தனியாக ஹோட்டல் நடத்துகின்றனர். இந்த பிரிவை சமாளிப்பதற்காக மூர்த்தியுடன் இணைந்து கடையை கவனித்து வருகிறார் தனம். தற்போது இந்த சீரியல் 1000 மாவது எபிசோடை கடந்துள்ளது. இதனை ஒட்டி சீரியல் டீம் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி அவர்களுக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.