வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ரிலீஸ் டைம் எப்போது? விஜய்யின் ரொமாண்டிக் போஸ்டருடன் வந்த மாஸ் அப்டேட்

First Published | Nov 5, 2022, 11:39 AM IST

வாரிசு படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது ரிலீஸ் டைம் உடன் கூடிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ள நிலையில், தற்போதே அப்படம் குறித்த அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி உள்ளன.

அதன்படி கடந்த மாதம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஸ்டில்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதேபோல் நவம்பர் 3-ந் தேதி மாலை இப்படத்தின் முதல் பாடல் புரோமோ வெளியிடப்பட்டது. அத்தோடு அந்த பாடல் நவம்பர் 5-ம் தேதியான இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரஞ்சிதமே என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடி உள்ளார்.

இதையும் படியுங்கள்... முதல் படத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு இணையான கலெக்‌ஷன்... வியக்க வைக்கும் லவ் டுடே படத்தின் முதல் நாள் வசூல்

Tap to resize

புரோமோவில் இடம்பெற்ற இரண்டு வரிகளே கேட்டவுடன் பிடிக்கும் வகையில் இருந்ததால் பாடலும் நிச்சயம் ஹிட் ஆகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் எப்போது ரிலீசாகும் என்பது குறித்த அப்டேட்டை வாரிசு படக்குழு தற்போது ஒரு புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி ரஞ்சிதமே பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைத்துள்ள இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ளார். விஜய் ராஷ்மிகா இடம்பெற்றுள்ள ரொமாண்டிக் போஸ்டரும் வெளியிடப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். போட்டோவிலேயே இருவரது கெமிஸ்ட்ரி வேறலெவலில் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  கிரிக்கெட் கதைக்களம்... முதன்முறையாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மாஸான டைட்டில் இதோ

Latest Videos

click me!