தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதுவரை இப்படத்தின் 50 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
24
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள அடுத்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்கிற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தியும் மற்றொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் இயக்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அப்படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக ரஜினி நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது.
44
மேலும் இப்படம் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட கதைக்களத்தை கொண்டதாம். அதனால் இப்படத்தில் கிரிக்கெட் நன்கு ஆடத்தெரிந்த நடிகர்களான விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். கூடுதல் சிறப்பாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்தை 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.