அடுத்த ‘ஆலுமா டோலுமா’ ரெடி... துணிவு படத்துக்காக அனிருத் பாடிய மாஸ் பாடலின் அப்டேட் வந்தாச்சு

Published : Nov 05, 2022, 08:21 AM ISTUpdated : Nov 05, 2022, 08:24 AM IST

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டு உள்ளார்.

PREV
14
அடுத்த ‘ஆலுமா டோலுமா’ ரெடி... துணிவு படத்துக்காக அனிருத் பாடிய மாஸ் பாடலின் அப்டேட் வந்தாச்சு

அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இரு படங்கள் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் வாரிசு படக்குழு அப்படத்தின் ஸ்டில்களை வெளியிட்டதை அடுத்து, துணிவு படக்குழுவும் அதற்கு போட்டியாக அஜித்தின் மாஸான போட்டோ ஒன்றை வெளியிட்டது.

24

இதையடுத்து நேற்று முன்தினம் வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ரஞ்சிதமே என்கிற பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், அதற்கான புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. தமன் இசையமைத்துள்ள அப்பாடல் இன்று மாலை ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்... thunivu update : மாஸ் லுக்கில் அஜித்..வேற லெவலில் வெளியான துணிவு அப்டேட்

34

இந்நிலையில், அதற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படக்குழுவும் அப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி சில்லா சில்லா என பெயரிடப்பட்டுள்ள அப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், அதற்கு வைஷாக் என்பவர் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் இசையமைப்பாளர் ஜிப்ரான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

44

அதுமட்டுமின்றி அப்பாடல் பதிவின் போது அனிருத் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் ஆலுமா டோலுமா ரேஞ்சுக்கு ஒரு பாடல் வர உள்ளது உறுதியாகி உள்ளது. ஆனால் அப்பாடல் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த அறிவிப்பை ஜிப்ரான் அந்த பதிவில் குறிப்பிடவில்லை.

இதையும் படியுங்கள்... Samantha: நோயால் அவதிப்படும் சமந்தா..! மனம் மாறிய நாகசைதன்யா.. மீண்டும் சேர்ந்து வாழ நடக்கிறதா பேச்சுவார்த்தை?

Read more Photos on
click me!

Recommended Stories