9 வருடங்கள் உருகி உருகி காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கோவாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட, சமந்தா - நாகசைதன்யா ஜோடி, திடீர் என கடந்த ஆண்டு விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இவர்கள் இருவரின் விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், இருவருமே இது குறித்து வெளிப்படையாக கூறவில்லை.