இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஹன்சிகாவின் தோழி ரிக்கி என்பவரின் கணவர் தான் சோஹைல். கடந்த 2016 ஆம் ஆண்டு சோஹாலுக்கு, ரிங்கியுடன் திருமணம் நடந்த போது, அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. தொழிலதிபர் சோஹைலை ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.