ஹைதராபாத், சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அஜித்குமாரின் புகைப்படங்கள் அனைத்தும் வைரலானது. தற்போது துணிவு படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் விஜயின் வாரிசு படமும் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.