Amala Paul : லோ நெக்கில் மனதை கவரும் அமலா பால்..க்யூட் போட்டோஸ் இதோ

First Published | Nov 4, 2022, 6:56 PM IST

அந்த வகையில் தற்போது லோ நெக் மற்றும் ஸ்லீவ் லெஸ் முழு உடையில் காட்சியளித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நாயகியாக வலம் வருபவர் அமலாபால். முன்னதாக கன்னட படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக இவர் திரைக்கு அறிமுகமாகி இருந்தார்.

பின்னர் மலையாள மொழி திரைப்படங்கள் பலவற்றிலும் துணை வேடங்களில் தோன்றினார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழில் மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்த படம் என்றால் அது மைனா தான். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நாயகியாக வந்த இவருக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை அளித்திருந்தனர். மலைவாழ் பெண்ணாக வந்து அசத்தியிருந்தால்.

Tap to resize

முன்னதாக சிந்து சமவெளி என்னும் படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் தோன்றியிருந்தார். மீண்டும் மலையாளத்தில் இரு படங்களில் நடித்த அமலபால், விகடகவி மூலம் மீண்டும் இங்கு வந்தார் அதோடு ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகளில் ஸ்வேதாவாக வந்து தனது நடிப்பின் ஆழத்தை காட்டி இருந்தார்.

பாசப் போராட்டத்திற்குள் சிக்கி இருந்த பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார் அமலா பால். இந்த படத்தில் விக்ரம் மனநலம் குன்றியவராக நடித்திருப்பார். பின்னர் வேட்டை படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். 

தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனையில், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லாத பட்டதாரி,  பசங்க 2, திருட்டுப் பயலே 2, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார்.

இதற்கிடையே ஏ.எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தின் மூலம் இயக்குனருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர் இயக்கத்தில் மீண்டும் தலைவா படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த காதல் 2014 ஆம் ஆண்டு திருமணமாக அரங்கேறியது. ஆனால் இரண்டு வருடங்கள் மட்டுமே அவருடன் வாழ்ந்த அமலா பால் குடும்பத்தில் உள்ளோர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்.

இதையடுத்து தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார் அமலாபால். அதன்படி இவர் ஆடை என்னும் படத்தில் நடித்து விமர்சனங்களையும், பாராட்டுகளையும் சேர்த்தே பெற்றுக் கொண்டார். ஆடை இல்லாமல் ஆடை படத்தில் நடித்திருந்தது பல விமர்சனங்களை உண்டாக்கி இருந்த போதிலும், இவரது போல்டான நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.

அதை தொடர்ந்து குட்டி கதை, சடலம் உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார் அமலாபால். இதற்கிடையே பல சட்ட சிக்கல்களையும் இவர் சந்தித்தார். 2018 ஆம் ஆண்டு வரி எய்ப்பிற்காக கைதும் செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த இவர் சொகுசு கார் போலி ஆவண பிரச்சனையிலும் சிக்கினார்.

தற்போது அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களை தன் கையில் வைத்துள்ளார் அமலா பால். தமிழில் அதோ அந்த பறவை போல எனும் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அமலாபால். அந்த வகையில் தற்போது லோ நெக் மற்றும் ஸ்லீவ் லெஸ் முழு உடையில் காட்சியளித்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார்.

Latest Videos

click me!